பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 முருகன், 'உலகத்தை எல்லாம் படைக்கின்ற உனக்கு இந்தப் பொருள் தெரியவில்லையே! அறியாதவன் படைத்தால் உலகம் உருப்படுமா?" என்று அவன் தலையில் குட்டிக் காலில் தளை பூட்டிச் சிறை வைத்தான். இந்தக் கதை, பெரிய அதிகாரியா னாலும் அவன் தவறு செய்தால் அவனை அவனுடைய தலை வன் ஒறுப்பான் என்ற முறையை நினைவூட்டுகிறது. கணக்கு 'எனக்கு முருகப் பெருமான் திருவருள் இருக்கிறது; ஆகையால் பிறப்பு வராது" என்று உறுதியாக அருணகிரியார் எண்ணி இருந்தார். 'இல்லை, இல்லை. பிறப்பை உனக்குக் கொடுக்கிறவன் பிரமன் அல்லவா? அவன் உனக்குப் பிறப்பைக் கொடுத்து விட்டால் என்ன செய்வாய்?' என்று ஒருவர் கேட்கிறார். 'நிச்சயமாகப் பிரமன் எனக்குப் பிறப்பைக் கொடுக்க மாட்டான்' என்று அவர் சொல்கிறார். பிரமன் ஒவ்வோர் உயிரினுடைய கணக்கையும் வைத்திருக் கிறான். இன்ன காலத்தில் இன்ன உயிர் இப்படிப் பிறக்க வேண்டு மென்று அந்தக் கணக்கை ஒலையில் எழுதி வைத்திருக்கிறா னாம். ஒவ்வோர் உயிரின் புண்ணிய பாவங்களையும் கணக்குப் பண்ணி இன்னார் இன்னார் இன்ன சமயத்தில் பிறக்க வேண்டு மென்று முன்கூட்டியே எழுதி வைத்துக்கொள்கிறான். கணக்கோ, குறிப்போ, நூலோ எதை எழுதினாலும் பழங்காலத்தில் ஒலை யில் எழுதுவார்கள். அந்த ஒலைக்குப் பட்டோலை என்று பெயர். 'பிரமன் முருகப் பெருமானுடைய அடியார்களை இனிப் பிறப் பதற்குரியவர்கள் என்று வரிசைப்படுத்தும் கணக்கோலையில் எழுதமாட்டான். இன்னாருக்கு இன்னபடி என்று வரையறை செய்யும் அதிகாரியாதலின், அப்படி எழுதுவதற்கு மனம் இடந் தராது. ஒருகால் முருகப் பெருமானுடைய தண்டனையை அவன் ஏற்றுக்கொள்வதற்கு முன்னால் எழுதியிருக்கலாம். அந்தப் பெருமானுடைய கையினால் குட்டுப்பட்ட பிறகு இனி ஜாக்கிர தையாக நடந்துகொள்ள வேண்டுமென்ற அறிவு பிறந்திருப் பதனால், இப்போது அவன் சிறிதும் தவறு செய்யமாட்டான். 14C)