பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 பழைய அநுபவம் “ஒருகால் பழைய காலமாக இருந்தால் படைப்புத் தொழில் உடையோம் என்ற செருக்கினால் என்னைப் பட்டோலையில் இடுவதற்கு வாய்ப்பு உண்டு. வேலையில் புதிதாகப் புகுந்தவர்கள் சில தவறுகள் செய்வது இயற்கை. ஆனால் இந்தப் பிரமனோ பலகாலமாகப் படைப்புத் தொழிலை நடத்தி வருகிறான். அது மட்டுமன்று. தான் செய்த பிழைக்காக முருகப்பெருமானுடைய தண்டனையையும் பெற்றிருக்கிறான். அப்படி இருக்க, அவன் இப்போது மீண்டும் தவறு செய்வானா? செய்யமாட்டான். செய்வதாய் இருந்தால் அவன் பழைய அநுபவத்தை மறந்திருக்க வேண்டும். அந்தச் செயல்தான் நமக்குத் தெரியுமே தன்னை வணங்காமல் சென்றமையினால் முருகப்பெருமான் பிரமனுக்குக் காலில் தளையிட்டுச் சிறையில் அடைத்தான். அந்த அநுபவம் அவனுக்கு மறந்திருக்காது. ஒருகால் மறந்திருந்து இப்போது என்னைப்பட்டோலையில் இட்டுவிட்டானோ? எழுதிவிட்டானோ' என்று கேட்கிறார். பங்கேருகன் எனைப் பட்டோலையில் இடப் பண்டு தளை தன் காலில் இட்டது அறிந்திலனோ? 'ஒருகால் அதனை மறந்து பட்டோலையில் என் பெயரை இட்டுவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானாலும் எனக்கு யாதொரு பயமும் இல்லை. நான் முருகப்பெருமானைப் புகல் அடைந்தவன். தன்னுடைய அடியார்களுக்கு இப்படி ஒரு நிலை வரப்போகிறது என்றால், முற்றறிவு உடையவனாகிய அவன் கணத்தில் அறிந்து கொள்வான். நான் அதைப்பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லை. அவன் பிரமனைச் சும்மா விடமாட்டான்.' எம்கோன் எங்கள் பெருமான் எத்தகையவன் தெரியுமா? முப்பத்து முக்கோடி தேவர்களுடைய துன்பங்களைப் போக்கினவன். அவர்கள் அறுபத்தாறுகோடி அசுரர்களாலே துன்புற்றார்கள். அமரர்கள் யாவரும் முருகன் திருவடியைப் புகல் அடைந்து, அடைக்கலம் என்று சொன்னவுடன் அவர்களைக் காப்பாற்று வதற்காக உறுதி கூறினான். அடைக்கலம் அடைந்தவர்களைக் 142