பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சால நன்று சொல்வதும் உண்டு. சாதிப் பெயர்கள் இந்தப் பாட்டில் தொனிக் கின்றன. ஆனால் இயல்பான பொருளுக்கும் இந்தத் தொனிக்கும் சம்பந்தம் இல்லை. முதலில், கருமான் மருகனை என்றார். கருமான் என்பது இரும்பு வேலை செய்கின்ற தொழி லாளிக்குப் பெயர். செம்மான் மகளை. செம்மான் என்பது தோல்வேலை செய்கிறவர்களுக்குப் பெயர். திருநெல்வேலிப் பக்கத்தில் இன்றும் அந்தப் பெயரால் அழைக் கிறார்கள். சர்மகாரர் என்பதன் திரிபாக இருக்கலாம். கருமா னுடைய மருகனை, ஒரு செம்மானுக்கு மாப்பிள்ளையை என்று தொனிக்கும்படி பாடினார் . மேலே, களவுகொண்டு வரும் ஆகுலவனை என்றார். ஆகுலவன் என்பது ஒருவகை வேடனுக்குப் பெயர். சேவல் கைக்கோளனை. கைக்கோளர் என்பது செங்குந்தர் குலப்பெயர். வேலன் என்பது மலைவாழ் சாதியாரில் ஒருவகையினருடைய பெயர். கருமான், செம்மான், ஆகுலவன், கைக்கோளன், வேலன் என்ற சாதிப் பெயர்கள் இந்தப் பாட்டில் தொனிக்கின்றன. சாதிப்பிரிவு இப்போது சாதிப் பிரிவை ஒழிக்கவேண்டுமென்ற முயற்சி தலைப்பட்டிருக்கிறது. சாதி அபிமானம் இருப்பது நல்லதுதான்; ஆனால் சாதிப் பகை இருத்தல் கூடாது என்பது நம்முடைய தலைவர்களின் கருத்து. பழங்காலத்தில் சாதிப் பிரிவினை ஒருவர் மீது ஒருவர் பகை கொள்வதற்காக அமையவில்லை. பெரும் கூட்டமாக இருந்தால் ஒரு காரியத்தைச் சாதிக்க முடியாது என்று கருதிச் சிறுசிறு குழுக்களாக அமைத்து வேலை செய்வது எல்லாக் காலத்திலும் வழக்கம். எப்போதும் ஓரிடத்தில் சக்தி குவிந்திருப்பதைவிடப் பரவலாக இருப்பது நல்லது என்று சொல்கிறார்கள். அந்தப் பரவல் முறையை மக்கள் சமுதாயத்தில் மேற்கொண்டு வகுப்பு வகுப்பாகப் பிரித்துக் கொண்டார்கள். 179