பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 பொய்கை நீர் கடைசியில் அந்தப் பொய்கையை அவன் அடைந்தான். அவனைப் போலவே வேறு சிலரும் நல்ல தண்ணீர் கிடைக்காத தொல்லையினால் பல இடங்களுக்குச் சென்று அலைந்து கடைசி யில் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். நெடுந் தூரத்தில் வரும்போதே அந்தப் பொய்கையிலிருந்து தண்மை யான காற்று வீசியது. பல காலமாகக் காணவேண்டுமென்ற ஆசை இருந்தமை யினால் தெளிவாகத் தெரிந்த அந்தப் பொய்கையை நெடுந்துரத் தில் காணும்போதே அவன் உள்ளத்தில் உவகை உண்டாயிற்று. நல்ல தண்ணீர் கிடைக்குமா என்று ஏங்கி இருந்தவனுக்கு இப் போது அதனைக் காணுகின்ற பேறு கிடைத்தது. ஒடி வந்தான். அதனை நெருங்கிவிட்டான். அதன் அருகில் சென்று படியில் இறங்கினான். இரண்டு கையினாலும் மொண்டான். காணும் போதே கண் குளிர்ந்தது. இப்போது அதை மொள்ளும் போது கையும் குளிர்ந்தது. இரண்டு கையினாலும் மொண்டவன் அப்படியே உண்டான். அவன் இன்பத்தை என்னவென்று சொல்வது அவனுடைய ஆயுளில் இதுவரையிலும் அத்தகைய தண்ணீரை அவன் உண்டதே இல்லை. உணவு கொள்ளவும் வேண்டாமல் இந்தத் தண்ணீரையே பருகிக் கொண்டிருக்கலாம் போல் இருக் கிறதே என்று அவன் எண்ணினான். மறுபடியும் கை நிறைய எடுத்து உண்டான். பலமுறை உண்ட பிறகு வயிறு நிரம்பிவிட்டது. அந்தப் பொய்கையின் கரையிலே உட்கார்ந்து கொண்டான். அவன் நல்ல தண்ணீருக்கு ஏங்கி எங்கெங்கோ அலைந்தானே, அந்தப் பழைய வரலாறுகள் எல்லாம் இப்போது நினைவுக்கு வந்தன. பழைய அதுபவம் மிகவும் ஆழமாகக் கிணற்றைத் தோண்டிப் பாதாளத்தி லிருந்து இப்போதும் பலவிடங்களில் தண்ணிரை எடுக்கிறார்கள். அப்படி ஆழமான கிணறுகளை வெட்டினாலும் சில சமயங்கள் மழை இன்மையினால் அந்தக் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் போய்விடுகிறது. பதிற்றுப் பத்து என்ற நூலில் கொங்கு நாட்டி லுள்ள சிலவகைக் கிணறுகளைப் பற்றிய செய்தி வருகிறது. ・ 量64