பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டையம் புண்டரிகம் காணுகின்ற அன்பர்களுக்கு முருகனுடைய திருவடி தாமரை மலராகத் தெரியும். கண்டு அண்டுகின்றவர்களுக்கு தாமரையாகக் கண்ணுக்குக் காட்சி தருவதோடு அதன் தண்டை ஒலியும் கேட்கும். சேரமான் பெருமாள் நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சுந்தரமூர்த்தி நாயனாருடைய நண்பர். அவர் நாள்தோறும் நடராசப் பெருமானைப் பூசிப்பது வழக்கம். அவர் இருந்த இடம் வஞ்சிமா நகரம். ஒவ்வொரு நாளும் பூசை முடிந்த தருணத்தில் நடராசப் பெருமானின் சிலம்பொலி கேட்குமாம். அப்படிக் கேட்டால் ஆண்டவன் தம் பூசையை ஏற்றுக் கொண்டான் என்று அவர் மன நிறைவு பெறுவார். ஒரு நாள் பூசை செய்யும் போது அந்த ஒலி கேட்கவில்லை. சற்றே தாமதமாகக் கேட்டது. அவர் அப்போது, 'நாம் ஏதோ தவறு இழைத்துவிட்டோம். அதனால்தான் சிலம்பொலி கேட்க நேரம் ஆயிற்று' என்று வருந்தினார். அந்த வருத்தத்தைப் போக்க ஆண்டவன், தில்லையில் தரிசனம் பண்ணுவதற்குச் சுந்தரமூர்த்தி வந்திருந்தான். அதனால் இந்த ஒலி கேட்கச் செய்ய நேரம் ஆயிற்று' என்று அருளினானாம். சிறந்த நாயனாராகிய சேரமான் பெருமாள் நடராசப் பெருமானுடைய திருவடி தரிசனத்தைக் கண்டு, சிலம்பொலியையும் கேட்டார் என்று இந்த வரலாறு தெரிவிக் கிறது. நெருங்கின அன்பர்களுக்குப் பாதச் சிலம்பொலி கேட்கும் என்பதை இந்த வரலாற்றினால் உணர்ந்து கொள்ளலாம். ஞானமெனும் தண்டையம் புண்டரிகம் எனவே, முருகப் பெருமானுடைய திருவடியைக் கண்டு அண்டுகிற தொண்டர்கள் தண்டையின் ஒலியையும் கேட்பார்கள். அந்தத் திருவடியை முதலில் கண்ணினாலே கண்டு, பின்பு அண்டி நின்று, கருத்தினாலே மொண்டு பார்க்கும் அன்பர்களுக்கு அது வெறும் தண்டையம் புண்டரிகமாகத் தோன்றாமல் ஞான மாகத் தோன்றும். ஞானம் பெற்றவர்கள் உலகத்திலுள்ள பொருள் களை முன் பார்த்த பார்வையும், இப்போது பார்க்கின்ற பார்வை யும் வேறாக இருக்கும். அகத்தில் கண் கொண்டு பார்க்கும் போது பொருள்களின் இயற்கை வடிவம் தோன்றும். இறைவனுடைய திருவடிகளாகிய தண்டையம் புண்டரிகத்தைக் கண்டு, அண்டி, மொண்டு நின்றால் அந்தப் புண்டரிகமே ஞானமயமாக நின்று 193