பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிவெளி களைத் தம்முடையனவாக மேற்கொண்டு இறைவனிடம் விண் ணப்பம் செய்துகொள்வன பல. அவற்றையெல்லாம் நாம்கூடச் சொல்லிவிடலாமே என்று தோன்றும். ஆனால் ஆண்டவனின் திருவருள் அநுபவத்தைப் பற்றி அவர் சொல்கிற இடங்கள் அவருடைய உயர்வையும், சிறப்பையும் காட்டுகின்றன. சென்ற பாட்டில் தம்முடைய நெஞ்சைப் பார்த்து, 'மாதர் மயலில் அகப்பட்டாயே!” என்று இரங்குவது போலப் பாடிய பெரியார் இப்போது நமக்கு உபதேசிக்கிறார். உலகத்தில் இருக்கும் போதே இறைவனுடைய அருள் இன்ப அநுபவத்தைப் பெறுவதற்கு எது வழி என்று சொல்கிறார். சிறிது நேரக் கிளுகிளுப்பு சில சமயங்களில் நமக்கு இறைவனுடைய நினைவு வரும் போது ஒருவகைக் கிளுகிளுப்பு உண்டாகிறது. உபநிடதங்களைப் பற்றி ஒருவர் பேசுகிறார்; மிக உயர்ந்த நிலையில் பல தத்து வத்தை எடுத்துச் சொல்கிறார். சுகதுக்கங்கள் இல்லாத நிலையே முத்தி. அந்த நிலையில் வெப்பம் இல்லை; குளிர்ச்சி இல்லை. காற்று இல்லை; ஆகாசம் இல்லை. பேச்சும் இல்லை; நினைப்பும் இல்லை. உடம்பினால் வருகிற இன்ப துன்பம் இல்லை. நாமே இல்லை. காலமும், இடமும் நின்றுவிடுகிற இடம் அது என்று வரிசையாக வருணிக்கிறார். அவற்றை நாம் கேட்கும்போது உலகத்தில் உள்ள நினைவு மாறி எங்கேயோ போய் நிற்பது போன்ற ஒர் உணர்ச்சி தோன்றுகிறது. உடம்பு கனத்தை இழந்து மேலே பறப்பது போன்ற உணர்ச்சியும் உண்டாகிறது. ஆனால் அதைக் கேட்டுவிட்டு வெளிவந்து பழையபடி பிரபஞ்சச் சேற்றில் உழலும்போது நாம் பழையபடி ஆகிவிடுகிறோம். நீராடும்போது உடம்பு குளிர்ந்து பின்பு வெளியில் வந்தால் மறுபடியும் பழைய புழுக்கத்தை அப்பிக் கொள்வது போல நம்முடைய இயல்பான நிலை நம்மை வந்து சூழ்ந்து கொள்கிறது. அந்த உயர்ந்த உண்மைகளைக் கேட்கும்போது ஓரளவு நமக்குப் புரிகிறது போல இருக்கிறது. சில சமயங்களில் பக்தர்கள் பஜனை செய்யும்போதும் இறைவனுடைய பெருங் கருணையைப் பற்றிச் சொல்லும்போதும் நம்முடைய உள்ளம் நெகிழும். மேலும் மேலும் அத்தகைய சங்கத்தில் சாரவேண்டு மென்ற ஆர்வம் 24了