பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 வைத்துக் கொள்வதும், விருந்தினர்களுக்கு வேண்டியவற்றைச் செய்வதும் ஆகிய காரியங்களைப் பருவம் வராமலே செய்ய லாம். பயிற்சி இருந்தால் போதும். ஆனால் பருவம் அடைந்த வுடன்தான் கணவனால் வரும் இன்பத்தை அடைய முடியும். இது அடிமரம் நன்றாக வலுத்து, கிளைகள் எல்லாம் விட்டு, மொட்டும் அரும்பின பிறகு மலர் தோன்றுவது போன்ற நிலை, ம்லர் தனியே தோன்றாது. அடிமரம் முதலிய உறுப்புகள் எல்லாம் மெல்ல மெல்ல வளர்ந்து அரும்பு தோன்றி அதிலிருந்து மலர் தோன்றும். . முயற்சியும் அநுபவமும் அப்படித்தான் இறைவன் அருள் அதுபவம் பெறுகின்ற மலர் கடைசியில் வரும். ஆனால் அதற்குமுன் உள்ளவற்றைப் பக்குவம் இல்லாதவர்களும் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய முயற்சி ஒரு பகுதி, அநுபவம் மற்றொரு பகுதி. முயற்சி இல்லாமல் அநுபவம் வராது. நம்முடைய நிலையில் செய்கிற முயற்சிகள் பல உண்டு. அவற்றுள் மிகவும் முக்கியமானது, நல்லவர்களுடன் சேர்ந்து உறவாடுவது. அப்படி உறவாடுவதால் முதலில் இறைவன் உண்டு என்பதும், அவன் திருவருளால் உயர்ந்த இன்பம் கிடைக்கும் என்பதும் உறுதியாக நம்முடைய உள்ளத்தில் தோன்றும். பெரியவர்களோடு சேராவிட்டால் அப்படி ஒன்று சாத்தியம் இல்லையென்ற ஐயமே தோன்றும். யாரோடு நாம் சேருகிறோமோ அதற்கு ஏற்றபடி நமது உள்ளத்தில் நினைப்புகள் உருவாகும். வியாபாரியோடு சேர்ந்தால் வியாபாரத்தைப் பற்றிய எண்ணங்களே உள்ளத்தில் வளரும். அறிவாளியோடு சேர்ந்தால் அறிவு பெறவேண்டுமென்ற ஆசை உண்டாகும். இறைவனுடைய அருள் நெறியில் செல்கிறவர் களோடு கொள்ளும் உறவு அருளநுபவம் பெறும் முயற்சிக்குத் தூண்டுகோலாக இருக்கும். அதுதான் உயிரோடு ஒட்டிய இன்பத்தைப் பெறுவதற்கு வழி. நல்லவர்களுடைய கூட்டுறவினால், கல்வியினால் அறிந்து கொள்ளாத பல உண்மைகளைத் தெளியலாம். 25C)