பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 என்று சொன்னார். கல்யாணத்திற்குச் சாட்சி வேண்டும். ஆனால் கடிமணத்திற்குச் சாட்சி கிடையாது. கல்யாணத்தில் இரண்டு கட்சிச் சம்பந்திகளும் இருப்பார்கள். ஊர்க்காரர்கள் இருப்பார்கள் கல்யாணத்தின் பயனாகிய கடிமணத்திலே யாரும் இருப்பது இல்லை. எந்தச் சாட்சியும் தேவையில்லை. அப்போதும் சாட்சி வேண்டுமென்று யாராவது சொல்வார்களா? அதுபோல் இறை வனைத் தனி வெளியில் சந்திப்பதற்குரிய முயற்சியை நாம் செய்வதற்குப் பல நல்லவர்களுடைய தொடர்பு வேண்டும். சத் சங்கத்தில் பழகி நல்லவற்றைக் கேட்க வேண்டும். அவற்றினால் நாம் நம்முடைய நாயகனைத் தேடி அடைய வேண்டுமென்ற ஆசை நம் உள்ளத்தில் பிறக்கிறது. அத்தகைய பழக்கத்தின் பயனாக எல்லோரையும் விட்டு நழுவித் தனியே நாயகனைச் சந்திக்க வேண்டுமென்ற ஆர்வமும் முயற்சியும் எழ வேண்டும். சான்று ஆரும் அற்ற தனி வெளியில் முருகனைச் சந்தித்தால் இன்பம் உண்டாகும். 3 கிருபாகரன் இனி அருணகிரியார் முருகனைப் பற்றிச் சொல்ல வருகிறார். முருகன் பெரும் கருணையாளன். அவன் கூட்டத்திலும் இருக்கிறான். தனியாகவும் இருக்கிறான். அவன் எந்தச் சமயத்திலும் நம்மிடம் தனியாக வந்து இன்பம் தரக் காத்திருக்கிறான். நாம் தாம் தனியாக இருப்பதில்லை. குழந்தை என்றும், குட்டி என்றும், படிப்பு என்றும், பாசம் என்றும் பற்றுக் கொண்டிருக்கிறோம். இவற்றையெல்லாம் உதறிவிட்டு நமக்காகத் தனியே நாயகன் காத்திருக்கின்றானே என்பதை எண்ணி நாம் அவனை நாடிச் செல்ல வேண்டும். நமக்கு அருள் செய்து இன்பம் தர வேண்டு மென்றே கருணைக்கு உறைவிடமான முருகன் காத்திருக்கிறான். முருகன் க்ருபாகரன் திருமால் மருகன் அருணகிரியார் முருகப்பெருமானோடு சேர்த்துப் பல மூர்த்தி களுடைய பெருமைகளையும் சொல்வது உண்டு. சிவபெருமான் 264.