பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன மலர் இறைவனை ஒரு பிம்பத்திலே ஆவாகனம் செய்து அதனையே இறைவனாக மதித்துப் பக்தியுடன் மலரிட்டுப் பூசை செய்ய வேண்டும். இவ்வாறு பூசை செய்யும் முறை பாரத நாட்டுக்கே சிறப்பாக அமைந்தது. பூசை செய்வதற்கு அமைந்த முறைகள் பல. சிவ பூசைக்கு உரிய விதிகள் பல. அந்த முறை விரிவானது. குருவினிடத்தில் தீட்சை பெற்றுக்கொண்டு முறையாகப் பூசை செய்யப் புகுந்தால் நெடுநேரம் செல்லும். அப்படியே அம்பிகை யின் பூசையும் மிக விரிவாக அமைந்தது. நவாவரணங்களுக் கிடையே திரிபுர சுந்தரியாகிய பராசக்தி எழுந்தருளியிருக்கிறாள். பரிவார தேவதைகளைப் பூசித்து அம்பிகையைப் பூசிக்கும் முறை தந்திர சாத்திரங்களில் மிக விரிவாகச் சொல்லப் பெற்றிருக் கிறது. முருகனை முதற் கடவுளாக வைத்துப் பூசிக்கும் முறையும் தனியே உண்டு. இப்படியே ஒவ்வொரு மூர்த்திக்கும் உரியதாகப் பூசாவிதானம் வெவ்வேறாக அமைந்திருக்கிறது. அந்த முறை களைக் குருவின் மூலமாக உபதேசம் பெற்றுச் செய்ய வேண்டும். ஆயினும் யாவருக்கும் இந்த வசதியும் பக்குவமும் கிடைப்ப தில்லை. அவர்களும் ஒருவாறு பூசை செய்யலாம். மலரிட்டு இறைவனை வழிபடலாம். யாவரும் கிரியையாகிய பூசையைச் செய்யலாம் என்ற உரிமையைத் திருமூலர் சொல்கிறார். "யாவர்க்கு மாம்இறை வார்க்கொரு பச்சிலை" என்று சொல்லும்போது பூசை யாவரும் செய்யலாம் என்று தெளிய வைக்கிறார். அருச்சனை பூசையில் முக்கியமானது அருச்சனை. அபிடேகம், அருச்சனை, தூப தீபம், நிவேதனம் ஆகியவற்றில் அருச்சனை சிறந்தது. ஆதலின் அருச்சித்தார் என்றாலே பூசை செய்தார் என்று பொருள் கொள்கிறோம். திருவிளையாடற் புராணத்தின் இறுதிப் படலம் அருச்சனைப் படலம் என்பது. ஆலவாய் இறைவனுடைய திரு விளையாடல்களைக் கேட்ட முனிவர்கள் மதுரை சென்று சொக்கலிங்கத்தைப் பூசை செய்த வரலாற்றை அப்படலம் சொல்கிறது. பூசனைப் படலம் என்று தலைப்பிட்டிருக்கலாம். ஆயினும் பூசையில் அருச்சனை சிறந்ததாகையால் அருச்சனைப் 1了