பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 நிலத்தில் படர்ந்தால் நல்ல காய் காய்த்து வளப்பமாக இராது. அது மேலே பந்தலில் ஒடிப் படர வேண்டும். பந்தலில் நன்றாகப் படர்கிற கொடி கொத்துக் கொத்தாகக் காய் காய்த்து நல்ல பயனைத் தரும். பந்தருக்கும், கீழே உள்ள கொடிக்கும் இணைப்பாக இருப்பது கொழுகொம்பு. கொழுகொம்பைப் பற்றி மேலே மெல்ல ஏறி, பின்பு பந்தரில் படரும் கொடி மண்ணின் உரத்தை யும், காற்றின் வளத்தையும், கதிரவனின் சக்தியையும் ஏற்றுக் கொண்டு நன்றாகப் படர்ந்து பயனைத் தரும். அப்படியின்றிப் பந்தல் இருந்தாலும், வளம் பொருந்திய மண்ணில் கொடி தோன்றினாலும், பந்தருக்கும் பூமிக்கும் இணைப்பாக ஒரு கொழுகொம்பு இல்லாவிட்டால் கொடி கீழே படர்ந்து பலரால் மிதிக்கப்பெற்று அழிவுறும். மனம் உயர்தல் மனம் கொடி போலப் பதைக்கிறது என்று சொன்னார். மனிதனுடைய மனம் வரவர உயர வேண்டும். 'உள்ளுவ தெல்லாம் உயடர்வுள்ளல்" என்று வள்ளுவர் சொன்னார். உயர்ந்த பொருளைப் பற்றிக் கொண்டு உயர வேண்டும். மேலுள்ள பொருளை நாடி நாம் மேலே ஏறுகிறோம். மாடியின் உச்சிக்கும், மலையின் மேலும் நாம் ஏறுவதற்குக் காரணம் நாம் இருக்கும் இடத்தைவிட உயர்ந்த இடத்தைப் போய் அடைய வேண்டுமென்ற ஆசைதான். அப்படி, மனம் மேலேயுள்ள பந்தரைப் போன்ற சிறந்த பொருளை அடையவேண்டுமென்று எண்ணி முயல வேண்டும். அந்த முயற்சிக்குக் கொழுகொம்புபோலப் பெரியவர்கள் வருகிறார்கள். குருவினுடைய உபதேசம் நமக்குப் பயன்படுகிறது. பந்தர் ஆண்டவனுடைய அருள் நலம் என்று சொன்னால் அந்தப் பந்தருக்குக் கொடியை ஏற்றிவிடுகின்ற கொழுகொம்பு நல்லவர் களுடைய உபதேசம் என்று சொல்லலாம்; அல்லது அடியார் களுடைய தொடர்பு என்று சொல்லலாம். அவை எல்லாம் இறைவனுடைய திருவருளால் வருவன. ஆண்டவனுடைய திருவருளால் அவனோடு இணைகின்ற இன்பம் கிடைக்கும். ஒருவகையில் பார்த்தால் அருளாகிய கொழு கொம்பைப் பற்றிக் கொண்டு இன்பமாகிய பந்தரில் படர வேண்டும். 314