பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன மலர் மலரை இட்டு அங்கே மனத்தையும் இட வேண்டும் என்று அருணகிரியார் சொல்கிறார். 'நின் தாளிணைக்கே புகட்டி' என்றார். மலரையும் சரி, மனத்தையும் சரி வேறு எங்கும் சாத்தக்கூடாது. மலரை யார் குழலில் சூட்டுவது என்ற எண்ணமின்றி, அதைக் கண்டவுடன் இறைவன் தாள் மலர் நினைவுக்கு வரவேண்டும். அதனை இறைவன் தாளில் அணியும்போது நம் மன மலரை இடுவதற்கு அடையாளமாகவே எண்ண வேண்டும். புற மலரை இடுவத னால் பூசை நிரம்பாது: அக மலரையும் இட வேண்டும். புற மலரை மட்டும் இட்டால் அது அரைப் பூசையாகவே முடியும். 'முருகா, உன் திருவடிக்குச் சிவந்த கடம்ப மலரைச் சூட்டும் போது என் மனத்தையும் உடன் வைக்க வேண்டும். இப்படிப் பணிய நீ என்னைப் பணிகொள்ள வேண்டும்' என்று வேண்டுகிறார் அருணகிரியார். . தனியே மனத்தை இறைவன் திருவடி மலரில் வண்டாக நின்று ஊதச் செய்ய வேண்டும்; அதுதான் யோகம். அதற்கு முன்பு செய்யும் பயிற்சி இது. குழந்தைக்கு மனக்கணக்குப் போடும் பிராயம் வருவதற்கு முன் புளியங்கொட்டையை வைத்துக் கணக் கிடச் சொல்லிக் கொடுப்பார்கள். அவ்வாறே இறைவன் திரு நாமத்தையும் மலரையும் கொண்டு அருச்சனை செய்வது, மன மலரையும் இறைவன் தாள் மலரில் இணைக்கும் பயிற்சியாக அமையும். அது முதிர்ந்தால் மனம் தாளைப் பற்றும். “தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது’’ என்பதில் சேர்தல் என்பது இடைவிடாது நினைத்தல் என்பதைக் குறிக்கும் என்பர். மனம் இறைவன் திருவடியை இடைவிடாது நினைப்பது எளிதிலே கைகூடும் செயலன்று. நடக்க மாட்டாத குழந்தை நடைவண்டியைக் கொண்டு நடை பழகிக் கொள் வதைப் போல மனம் பூவைக் கெர்ண்டு தியானத்தைப் பழகிக் கொள்ள வேண்டும். நெஞ்சு என்பது உள்ளத்தைக் குறிப்பது. மனத்தின் உள்பகுதி அது. அதைக் கடம்போடு முருகன் திருவடியில் புகட்ட வேண்டு i fð íTË D. 25