பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராப்பகல் அற்ற இடம் மாகத் தோன்றுகிறது. இரண்டையும் முறையே அறக் கருணை, மறக் கருணை என்று சொல்வார்கள். அறக் கருணை அநுக்கிரகம்; மறக்கருணை நிக்கிரகம். அதுக்கிரக நிக்கிரகமாகிய இரண்டும் ஒரு வகையில் இறைவன் பராக்கிரமத்தைச் சொல்லும். இங்கே முருகப்பெருமான் எல்லோரையும் விடச் சிறந்த பராக்கிரமம் உடையவனாக இருக்கிறான். அவன் கையில் அவன் பராக்கிரமத் திற்கு அடையாளமாக வேல் விளங்குகிறது. கிருத சங்கார பயங்கரன் அசுரர்களைச் சங்காரம் செய்தவன் அவன். அவர்களுக்குப் பயத்தைத் தோற்றுவிக்கிறவன். உலகத்தவருக்குப் பயத்தை உண் டாக்கி ஞானிகளுக்கும், தேவர்களுக்கும் துன்பத்தை அளித்தவன் சூரன். தன்னுடைய உறவினர்களாகிய அசுரர்களைப் படையாகக் கூட்டிக் கொண்டு எப்போதும் துன்பம் செய்து கொண்டிருந்தான். அவன் பேரைக் கேட்டாலே இந்திரன் முதலிய தேவர்கள் பயந்தார்கள். எல்லோருக்கும் பயத்தை உண்டாக்கித் தாம் மட்டும் பயப்படாமல் இருந்த நிருதர்களும் பயம் கொள்ளும்படி செய்தவன் முருகன். நிருதசங் கார பயங்கரனே! "சிறந்த வீரராகிய திருமால் போற்றுகின்ற பெரு வீரனே, உண்மையான வீரத்தை உணர்ந்த அக் கடவுள் மெச்சிப் பேசு கின்ற பராக்கிரமத்தையுடைய வடிவேற் பெருமானே, அசுரர்கள் பயம் கொள்ளும்படியாகச் செய்து அவர்களைச் சங்காரம் செய்த பெருமானே, நீ எனக்கு இராப்பகலற்ற இடத்தைக் காட்டி நான் அமைதியாக இருந்து தியானம் செய்து உய்வதற்குரிய உன் னுடைய தண்டையந் தாளைத் தர வேண்டும்' என்று இந்தப் பாட்டில் அருணகிரியார் பிரார்த்தனை செய்கிறார். 女 இராப்பகல் அற்ற இடம்காட்டி யான்இருந் தேதுதிக்கக் குராப்புனை தண்டையந் தாள்.அரு ளாய், கரி கூப்பிட்டநாள் 393