பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பய பக்தி இவ்வாறு உள்ளம் குளிர்ந்து, கண் குளிர்ந்து, அன்பால் நிறைந்த பெரியவர்கள் முருகனைக் கும்பிட்டு வாழும் இட மாதலால் திருத்தணிகை ஈரம் நிரம்பியதாக இருக்கிறது. ஆதலால் மழை பொழிகின்ற மேகங்கள் அங்கே வரும். வந்து மழை பொழியும். மழை பொழிவதால் நீர் வளம் நிரம்பியிருக்கும். அதனால் வாவிகளும் வயல்களும் வளம் சிறந்து விளங்கும். அத்தகைய திருத்தணி மாமலையில் முருகப் பெருமான் எழுந் தருளியிருக்கிறான். துவஜம் கட்டினவன் அவன் எந்தக் காரியத்தையும் நினைத்ததை நினைத்தபடி முடிக்கிறவன். ஒன்றை மனத்தில் சங்கற்பம் பண்ணிக் கொண்டு, 'இதை முடித்துத்தான் மறுகாரியம் பார்ப்பேன்’ என்றால் அதற்கு இரண்டு அடையாளம் சொல்வது உண்டு. காப்புக் கட்டிக் கொண்டிருக்கிறான் என்றும், துவஜம் கட்டிக் கொண்டிருக்கிறான் என்றும் சொல்வதுண்டு. இந்தக் காரியத்தைச் செய்து விடுவேன் என்று காப்புக் கட்டிக் கொண்டிருக்கிறான் என்றும், இதனை அடியோடு ஒழித்து விடுவேன்' என்று துவஜம் கட்டிக் கொண் டிருக்கிறான் என்றும் சொல்வது உலக வழக்கு. துவஜம் கட்டு வது என்பது பெரும்பாலும் பொல்லாததை அழிக்கும் வீரத்தைச் சுட்டி நிற்கிறது. முருகப்பெருமான் திருத்தணி மாமலையில் சேவல் கொடியைக் கட்டியிருக்கிறான். அடியார்களுக்குத் தீங்கு செய்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் யாவரையும் அழித்து விடுவேன் என்று துவஜம் கட்டிக் கொண்டிருக்கிறான். அந்தத் துவஜந்தான் சேவல். அதனுடைய பெருமையைக் கந்தர் அலங் காரத்தில் பல இடங்களில் நாம் பார்த்தோம். - குக்குடத் துவஜன் ஆகிய ஆண்டவன் திருத்தணி மாமலை யில் வாழ்கிறான். பூவுலகத்தில் உள்ள மலையில் அவன் துவஜம் கட்டிக் கொண்டு வாழ்ந்தாலும் அவன் தேவலோகத்தி லுள்ள தேவர்களுக்கும் தலைவனாக இருக்கிறான். தேவர்கள் தம் முடைய தலையில் மாணிக்கத்தைப் போல அணிந்து வழிபடுகிற பெருமான் அவன். அப்படி இருந்தும் ஆருயிர்களைக் காப்பாற் றும் பொருட்டு இந்த உலகத்திற்கு எழுந்தருளி வந்து, குளிர்ந்த சூழ்நிலையை உடைய திருத்தணி மாமலையில் அவன் வாழ்கிறான். 4世了