பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 கற்பக மரம் வாடியது. காமதேனு ஓடியது. அமரர்கள் செயல் இழந்தார்கள். அவர்களது செயல் ஒட்டம் தடைப்பட்டது; இன்ப ஒட்டம் நின்றுவிட்டது. ஆக்கம் பெற்ற இமையோர் மேன் மேலும் சுறுசுறுப்புடன் வேலை செய்வது மாறித் தேவலோகம் முழுவதும் தேக்கம் அடைந்தது. இமையவர் வாழ்வு தேங்கியது. இந்திரன் ஆணை தேங்கியது. காமதேனுவின் ஒட்டம் தேங்கியது. தேவலோகத்து நடமாட்டம் தேங்கி நின்றது. சுறுசுறுப்புக்கும், பொலிவுக்கும், போகத்திற்கும் இடமாக இருந்த தேவலோகம் இப்போது தேங்கிய குட்டையாக நாற்றம் எடுத்துக் கொண்டிருந்தது. அவ்வாறு தேங்கிய அண்டத்தில் இருந்த இமையவர்கள் எல்லாம் தம்முடைய இடத்தில் இல்லாமல் சிறையில் காலில் விலங்கு பூட்டப் பெற்றுத் திண்டாடினார்கள். அவர்களுடைய சிறை வாழ்க்கையை நீக்க வேண்டுமென்று கருதி முருகப் பெருமான் புறப்பட்டான். அப்போது தன்னுடைய சிற்றடியில் பூங்கழல் கட்டிக் கொண்டானாம். தேங்கிய அண்டத்து இமையோர் சிறை விடச் சிற்றடிக்கே பூங்கழல் கட்டும் பெருமாள். கலாபப் புரவி முருகப் பெருமான் தன்னுடைய அருளை ஒடவிடுத்தான். அது தேங்கிக் கிடந்தால் அண்டத்து இமையோர்களுடைய வாழ்வில் தேக்கம் அப்படியே இருந்துவிடும். முருகப் பெரு மானின் வேகத்தை என்ன என்று சொல்வது அவன் பூங்கழலைக் கட்டிக் கொண்டு எதிரே பார்த்தான். பச்சைக் கலாபத்தை வானுற விரித்துக் கொண்டு அவனுடைய ஊர்தியாகிய மயில் வந்து நின்றது. அவனது உள்ளத்தில் இருந்த கருணை வேகத்தை அது நன்றாகத் தெரிந்து கொள்ளும். அது மிகவும் விரைவாகச் செல்லும் ஆற்றல் உடையது. - இருவகைக் கோலம் முருகப் பெருமான் மயில்மேல் போகும் கோலம் இரண்டு வகைப்படும். ஒன்று அடியார்களுக்கு அருள் செய்வதற்காகப் போகும் கோலம். அப்போது தனியாகப் போகமாட்டான். வள்ளி நாயகியுடன் செல்வான். 36