பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலாபப் புரவியும் தனிவேலும் 'நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான்' இது அருள் செய்வதற்காகச் செல்லும் கோலம். அப்போது அவ னுடைய மார்பில் கடம்ப மாலை புரளும்; சந்தனம் இலங்கும்; முகத்தில் புன்னகை பொலியும்; உடம்பெல்லாம் பல அணிகள் மிளிரும். வேறு ஒருவகையில் அவன் மயில்மேல் செல்வதும் உண்டு. அது வீரச் செருக்குடன் போருக்குப் புறப்படுவது. அப்போது அவன் காலில் கழல் கட்டியிருப்பான். இடையில் வாள் கட்டியிருப்பான். கையில் வேல் எடுத்திருப்பான். இந்தக் கோலத்தோடு வந்து நின்றால் மயில் மிக வேகமாக மிடுக்குடன் அவனை ஏந்திச் செல்லும். அடியார்களிடத்தில் அவன் எழுந் தருளும்போது அந்த மயில் நடக்கும் நடையே தனி. அப்படியே பகைவர்களை அழிப்பதற்காக முருகப் பெருமான் புறப்படும் போது அவனுக்குள்ள மிடுக்கைப் போலவே மயிலும் மிக மிடுக்கோடு கலாபத்தை வீசி நடக்கும். மயிலின் மிடுக்கு இப்போது மயில் பகைவரை ஒடுக்கும் மிடுக்கோடு நடக் கிறது; தன் கலாபத்தை விரித்து முருகப் பெருமானைத் தன் மிசையே தாங்கி நடக்கிறது. முருகன் அடியார்களுக்கு அருள் செய்ய எழுந்தருளும்போது, அடியார்களுடைய உள்ளத்தில் உள்ள பயத்தைப் போக்கிக் குளிர்ச்சியைத் தந்து அநுகூலமாக நடக்கும் தன்மை வாய்ந்தது அந்த மயில். இப்போதோ உலகம் கிடுகிடு என்று நடுங்கும்படியாக அது நடக்கிறது. முருகப் பெரு மானைத் தாங்கிக் கொண்டு சண்டப் பிரசண்ட வேகத்தோடு அது உலகு அதிர நடக்கும்போது, அந்த அதிர்ச்சியைப் பகைவனாகிய சூரனுடைய படைகள் உணருகின்றன. இன்னும் தேவர்களுடைய படை வரவில்லை; முருகப் பெருமானுடைய கணங்கள் வர வில்லை. எங்கோ நெடுந்தூரத்தில் மயில் வருகிறது. அப்படி வந்த அளவில் அதனுடைய அதிர்ச்சியைக் கண்டு சூரனுடைய படையில் உள்ளவர்கள் நடுங்குகிறார்கள். 'படையின் செம்புழுதி இன்னும் தோற்றாமல் இருக்க, படையின் ஒரு முனையும் சிறிதும் கண்ணுக்குப் படாமல் இருக்க, இப்படி உலகம் நடுங்கு கிறதே! இனி அந்தப் படை வந்துவிட்டால் எப்படி இருக்கும்!” க.சொ.\1-4 37