பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 கிறது. அவர் இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டார். அன்று. கோர்ட்டுக் கலைந்து வெளியே வந்தார். அப்போது யாரோ ஒருவர் ஒரு துண்டுக் கடுதாசைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார்; "இதைப் பாருங்கள் என்று சொல்விட்டுப் போய் விட்டார். அவர் இன்னார் என்று தெரியவில்லை. அது தினசரிப் பத்திரிகையில் வந்து கிழிக்கப்பட்ட ஒரு துண்டு விளம்பரம். 'துப்பறிபவருக்குரிய சான்றிதழைக் கொடுப்போம். அதற்கு இரண்டு டாலர் விலை' என்று ஒரு விளம்பரத்தை யாரோ செய்திருந்தார்கள். அதுதான் அந்தத் துண்டு. கோர்ட்டில் இருந்து வெளியே வரும்போது அந்தத் துண்டு கிடைத்தது. அதைப் பார்த்துவிட்டுப் பையில் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அவருக்குக் கலவரமாக இருந்தது. எதற்காக அதை அவர் கொடுத்தார்?' என்று யோசனை செய்து கொண்டிருந்தார். 'சில பேர்கள் பொய்யாக அதிகாரம் இல்லாமல் துப்பு அறி பவர்களாக நற்சாட்சிப் பத்திரத்துடன் வருவார்கள் போலும்! இந்த வழக்கில் அப்படி யாராவது உண்டோ? என்று யோசித் தார். அதைத் தொடர்ந்து மற்றொரு நினைவும் அவருக்குத் தோற்றியது. அவர் மேற்கொண்டிருந்த வழக்கில் குற்றவாளிகள் குற்றம் செய்தார்கள் என்று நிரூபிப்பதற்குத் துப்பறிபவர் ஒருவர் முக்கியமான சாட்சியாக இருந்தார். ஒருகால் அவர் முறையான நற்சாட்சிப் பத்திரம் பெறாதவராக இருக்கலாமோ என்ற சந்தேகம் அந்த வக்கீலுக்கு உண்டாயிற்று. அதோடு மற்றொரு விஷயமும் ஞாபகம் வந்தது. துப்பறிபவர் வெளியே வரும் போது, 'எங்கே எனக்குப் பணம்?' என்று ஒருவர் கேட்டது காதில் விழுந்தது. அந்த நினைவையும் இந்த விளம்பரத்தோடு இணைத்துப் பார்த்தார் வக்கீல். ஒருகால் அவர் முறையாகச் 'சர்ட்டிபிகேட் வாங்காத துப்பறிபவராக இருந்தால் அவருடைய சாட்சியும் செல்லாதே என்ற எண்ணமும் வந்தது. இறைவ னுடைய திருவருளால் அப்படியும் இருக்கலாம் என்று நினைத்தார். மறுநாள் வழக்காடத் தொடங்கும்போது அந்தத் துப்பறி பவரை மீட்டும் கூண்டில் நிறுத்தி, "நீர் எங்கே படித்தீர்? உம் முடைய நற்சாட்சிப் பத்திரம் எங்கே?' என்று கேட்டார். அவர் உண்மையில் போலித் துப்பறிபவர்; அதனால் நடு நடுங்கிவிட்டார். பிறகு அவர் சொன்ன சாட்சியம் பயன் இல்லாமல் போயிற்று. 50