பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைவரும் தொண்டு குற்றவாளிகள் விடுதலை பெற்றனர். முன்பின் தெரியாத ஒருவர் அந்த விளம்பரத் துண்டைக் கொடுத்ததுதான் உண்மையான நிரபராதிகள் தண்டனை பெறாமல் விடுதலை பெற்றதற்குக் காரணம். அப்படி அது கிடைக்கும்படியாக இறைவன்தான் தூண்டி னான் என்பதை அந்த வக்கீல் நம்பினார். இது ஒரு நிகழ்ச்சி. பெண்மணியின் அநுபவம் பின்னும் ஒர் உதாரணம். சினிமாவில் இருப்பவர்களுக்குத் தெய்வ நம்பிக்கை இராது என்று நாம் நினைத்துக் கொண்டிருக் கிறோம். ஆனால் ஒரு பெண்மணி தன்னுடைய அநுபவத்தைச் சொல்கிறாள். அவளுக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. அலங்கரிப்பவர் பஞ்சை வைத்து அழகு செய்து கொண்டிருந்தார். அப்போது ஏதோ ஒரு மின்கருவியிலிருந்து பஞ்சில் நெருப்புப் பற்றிக் கொண்டுவிட்டதாம். அதனால் கண்ணிமை, புருவம் எல்லாம் நெருப்பினால் எரிந்துவிட்டன. உடனே அந்தப் பெண் மணியை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனார்கள். கண்ணுக்கு மருந்து போட்டுக் கட்டிவிட்டார்கள். கண் பார்வை வருமோ இல்லையோ என்று டாக்டர்களும், மற்றவர்களும் அஞ்சினார்கள். நிச்சயமாக இந்தப் பெண் கண் பார்வையை இழந்து விடுவாள் என்றே டாக்டர்கள் எண்ணினார்கள். ஒரு வாரம் ஆயிற்று. கண் கட்டை அவிழ்த்தார்கள். கட்டுப் போட்டிருந்த காலம் எல்லாம் அந்தப் பெண்மணி ஆண்டவனையே எண்ணிக் கொண்டிருந் தாள். இளமையில் நடந்த ஒரு சம்பவத்தினால் அவளுக்கு இறைவனிடம் அசையாத நம்பிக்கை இருந்தது. அதனால்தான் அப்போதும் ஆண்டவன் காப்பாற்றுவான் என்ற உறுதியின்மேல் வேறு எதையும் நினைக்காமல் அவனையே பிரார்த்தனை பண்ணிக் கொண்டிருந்தாள். கண் கட்டை அவிழ்த்தார்கள். பார்வை நன் றாகத் தெரிந்தது. விரைவில் இமை மயிரும், மற்றவைகளும் வளர்ந்துவிட்டன. அவள் சொல்கிறாள்; "கட்டுக்களை அவிழ்த் தேன். இமை பழையபடியே வளர்ந்திருந்தது. என்னுடைய முகத் தில் ஒருவகையான மாசும் இல்லை. என் பார்வை சரியான முறையில் அமைந்திருந்தது. டாக்டர்களுக்கு இது ஒரு பெரிய அதிசயமாக இருந்தது. என்னுடைய பிரார்த்தனையும், நம்பிக்கை யும் விளைத்த விளைவு இதுத என்று உறுதியாகக் கருதுகிறேன்' 51