பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைவரும் தொண்டு கல்வியால் பயன் இல்லை கற்ற கல்வியும் போய் என்கிறார். 'நஹி நஹி ரட்சதி டுக்ருங்கரனே' என்று சங்கராசாரிய சுவாமிகள் சொல்கிறார். இலக்கண சூத்திரத்தை நினைந்து அப்படிப் பாடுகிறார். கல்விக்குள்ளே மிகவும் நுட்ப மானது இலக்கணம். இந்தக் காலத்தில் விஞ்ஞானம் என்று வைத்துக் கொள்ளலாம். பழங்காலத்தில் இலக்கணப் புலவர்களைக் கண்டால் எல்லோருக்கும் அச்சம். அவர்களைப் பெரிய புலவர் கள் என்று சொல்வார்கள். அதுபோல இன்று படிப்புக்குள்ளே விஞ்ஞானப் படிப்பே பெருமை என்று எல்லோரும் கொள்கிறார் கள். பஞ்ச பூதங்களைத் தம் ஆற்றலுக்குள் நிறுத்தி வேலை வாங்கும் சக்தி விஞ்ஞானிகளுக்கு இருக்கிறதென்பதைப் பார்த்துத் தான் அவர்கள் இறைவேைகவிடப் பெரியவர்கள் என்று நாம் நம்புகிறோம். அத்தகையவர்களுடைய விஞ்ஞான அறிவுங்கூட மரணம் வருங்காலத்தில் அவர்களுக்குச் சிறிதும் பயன்படாது. உறவினரும் ஊராரும் s மரண சமயத்தில் நம்முடைய உடம்பும் அறிவும் சரியான நிலையில் இருப்பதில்லை; சோர்வடைகின்றன. ஆதலின் அறி வோடு ஒட்டிய கல்வியும் தளர்ந்து போகிறது. ஆனால் நமக்குப் புறம்பே நின்று நம்முடைய நன்மையில் கண்ணாக இருக்கும் உறவினர்கள் அப்போது தளர்வதில்லையே! அவர்கள் ஏதேனும் உதவி செய்ய முடியுமா? ஆற்றிலே ஒருவன் கால் நழுவி நீரிலே போனால் கரையில் இருப்பவர்கள் காப்பாற்றுகிறார்கள். ஒருவன் கால் இடறி விழுந் தால் மற்றவர்கள் தூக்கி நிறுத்துகிறார்கள். அதுபோல, மரண காலத்தில் உறவினர்கள் தம்மால் இயன்றதைச் செய்து இறவாமல் காப்பாற்ற முடியுமா? முடியாது. மரண வேதனையையாவது குறைக்க முடியுமா? அதுவும் முடியாது. உறவினர்கள் மட்டும் அன்று; ஊர்க்காரர்கள் எல்லோருமே சேர்ந்து ஒருமுகமாக ஏதாவது செய்து மரணத்துன்பத்தை மாற்றவோ குறைக்கவோ 63