பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 மூட்டிக் கபால மூலாதார நேர்அண்ட மூச்சை உள்ளே ஒட்டிப் பிடித்து எங்கும் ஓடாமல் சாதிக்கும் யோகிகளே! மூச்சை உள்ளே வாங்கி மீட்டும் வெளிவிடுவதனால் பயன் இல்லை. உள்ளே நிறுத்துகிற காலம் அதிகமாக அதிகமாகத்தான் யோகத்தில் வெற்றி உண்டாகும். உள்ளே நிறுத்துவதைக் கும்பகம் என்று சொல்வார்கள். உள் இழுப்பதைப் பூரகம் என்றும், வெளி விடுவதை இரேசகம் என்றும் சொல்வர். இந்தக் கும்பகத்தால் உடம்பில் பலவகையான கிளர்ச்சி உண்டாகும். சாமான்யமாக யோக முறையில் புகுகிறவர்களுக்கு மூக்கின் நுனியில் கண் பார்வையை வைத்து, மெல்லச் சுவாசத்தை நிறுத்திக் கும்பகம் செய்த அளவில் அவர்களுடைய யோகம் நிறைவு பெறாது. அதற்குமேலும் பல படிகளைத் தாண்ட வேண்டும். அத்தகைய அஷ்டாங்க யோகிகளைப் பார்த்து, 'யோகிகளே, இதைச் செய்யுங்கள் என்று சொல்ல வருகிறார். - யோகம் சாதனம் யோகம் என்பது ஒருவகைச் சாதனந்தான். ஞானத்தை அடைவதற்கு அது வழி. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற படிகளில் மூன்றாவது படியாக இருப்பது யோகம். யோகத்தின் முடிவில் ஞானம் வர வேண்டும். யோகத்தினால் உடம்பில் உண் டாகிற தடை முறியுமே யொழிய இறைவன் திருவருள் நேராகக் கைகூடாது. அந்த மூன்றாவது படியிலேயே அத்தகைய துன்பம் என்றால் அதற்குமேல் ஞானத்தை எப்படி அடைய முடியும்? ஆகையால் யோகத்தை மாத்திரம் நம்பிக் கொண்டு வாழ்ந்தால் உடம்புக்கும் கேடு; உள்ளத்திற்கும் கேடு. ஒரளவு அதில் வெற்றி பெற்றுவிட்டாலோ அகந்தை தலைக்கேறிப் போய்விடுகிறது. அதற்குப் பின்பும் சஹஸ்ராரத்தில் அம்பிகை இருப்பதாகப் பாவித்து அந்தத் தரிசனத்தை செய்தால் உண்மைக் காட்சி கிடைக்கும். இவ்வளவு கஷ்டப்பட்டு மறுபடியும் இறைவனிடத்தில் அன்பு செய்கின்ற வழிதான் வருகிறது. ஆகையால் இப்போதே அதைச் செய்யலாம் என்று அருணகிரியார் உபதேசிக்கிறார். எளிய வழி "நீங்கள் உங்கள் முயற்சியினால் ஆண்டவன் இருக்கும் இடத்திற்குப் போய் அவன் திருவடியைச் சார்ந்துவிடலாம் என்று 78