பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எளிய வழி - வகையிலும் சிறந்தவன். தேவர்களுக்குத் தலைவனாக இருக்கும் இந்திரனுக்கே அருள்பாலித்தவன். அத்தகைய தேவசேனாபதி வள்ளியைத் தேடி வந்தது, வள்ளி நாயகிக்கு மட்டும் நலம் செய்வதற்காக அன்று. வள்ளியின் நிலையில் இருக்கிற நம்மைப் போன்றவர்களுக்கும் அவன் கருணை கிடைக்கும் என்பதைப் புலப்படுத்தவே அந்தத் திருவிளையாடலைப் புரிந்தான். அவனை அன்றி வேறு ஒன்றையும் நினையாமல் இருந்தால், அவன் நம்மையும் வந்து ஆட்கொள்வான் என்பதைத் தெரிந்துகொள்ள அந்தத் திருவிளையாடல் பயன்படுகிறது. காட்டில் இருந்த குறத்தியாகிய வள்ளி நாயகியைப் போல, பெரும் கருணையை உடைய பெருமானாகிய முருகன் பாதத்தில் கருத்தை வைத்தால் அவன் உயர்ந்த இடத்திற்கு நம்மைக் கொண்டு செல்வான். காட்டில் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின் வீட்டில் புகுதல் மிக எளிதே. அவன் பாதம் நாம் இருக்கும் இடத்திற்கு நடந்து வந்துவிடும். முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கும் இடத்தில் கமழும் பதம் அது. ஆனாலும் அடியார்கள் தலையிலும், உள்ளத்திலும் அது வந்துவிடும். அவர்களை ஆட்கொள்வதற்காக அவர்கள் நடமாடும் இடத்தில் வந்து விடும். - "சுனையோடு அருவித் துறையோடு பசுந் தினையோடு இதனோடு திரிந்தவனே' என்று கந்தர் அநுபூதியில் பாடுகிறார். வள்ளி நாயகி சுனைக்குப் பக்கத்தில் இருக்கிறாளா என்று முருகன் அங்கே சென்று பார்த் தான். அருவியில் நீராடுகிறாளா என்று அங்கே சென்று பார்த் தான். தினைக் கொல்லையைக் காவல் புரிகிறாளா என்று அங்கே போய்த் தேடினானாம். . உட்கருத்து தன்னை அன்பன் நாடித் தேடித் திரிந்து அலைவதற்குப் பதிலாக அன்பனைத் தானே நாடித் தேடி ஆட்கொள்கின்றவன் முருகன் என்பதை அந்தத் திருவிளையாடல் காட்டுகிறது. கருணை மிகுதியினால் எளியவனாக இருக்கிற ஆண்டவனுடைய பாதத் தில் கருத்தைப் புகட்டினால் எளிதில் வீட்டைப் பெற்றுவிட லாம். இந்த வழி நமக்கு இருக்கவும், இதை மறந்துவிட்டு 81