பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எளிய வழி மார்க்கத்தை ஏன் கொண்டாடுகிறீர்கள்? அதுவே வேண்டாம்' என்று அருணகிரியார் சொல்லுகிறார்; இவர்கள் பக்தி நெறிக்கு வந்துவிட்டால் அமைய வேண்டிய குணங்கள் எல்லாம் தாமே வந்துவிடும் என்ற நினைவினால் இவ்வாறு தொல்லை தரும் வழி வேண்டாம்; எளிய வழிக்கு வாருங்கள் என்கிறார். வீட்டில் புகுதல் மிக எளிது. மிக எளிது வீடு என்பது எந்த வழியில் சென்றாலும் ஒன்றுதான். அதன் உள்ளே நுழைந்தவர்களுக்குள் வேறுபாடு இல்லை. அந்த வீட்டுக்குள் நுழைவதற்குப் பல மூலைகளிலும் கதவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு வாசலிலும் கதவு உண்டு. ஆனால் ஒவ்வொரு கதவுக்கும் நேரே ஒவ்வொரு வகையான பாதை இருக்கிறது. மேற்குப் பக்கத்தில் ஒரே காடு; முள்ளும் புதரும் மண்டிக் கிடக்கின்றன. பாம்பும் பூரானும் விஷப் பிராணிகளும் நடமாடிக் கொண்டிருக்கின்றன. செடிகொடிகளை விலக்கிக் கொண்டு பூச்சிகளை நாசம் செய்து வீட்டுக்குள் முடிவாகத் தப்பி வருவது என்றால் எளிய காரியம் அன்று. 'ஏன் அப்பா அந்த வழியாக வருகிறாய்? கிழக்குப் பக்கம் பாதை நன்றாக இருக்கிறதே. இவ்வழியாக வந்துவிட்டால் எளிதில் வீட்டுக்குள் புகலாம்' என்பாரைப் போல இந்தப் பாட்டைப் பாடுகிறார். 'இங்கே செடிகொடி ஒன்றும் இல்லை. காற்று நன்றாக வீசுகிறது. பாதை தெளிவாக இருக்கிறது. பலர் இந்த வழியில் சென்று வீட்டுக்குள் புகுந்திருக்கிறார்கள் என்று சொல்வாரைப் போல, காட்டில் குறத்திபிரான் என்று நினைப்பூட்டுகிறார்.

  • . உண்மையில் மற்ற நெறிகளை எல்லாம்விடப் பக்தி நெறி, செல்லும்போதே இன்பத்தைத் தருவது. முத்தி என்று தனியே ஒர் இன்பம் இருக்கிறதென்றும், பக்தி நெறியினாலே அடைவதற்கு உரியது அது என்றும் சிலர் சொல்வார்கள். ஆனால் பக்தி நெறி யில் சென்றவர்கள் அப்படிச் சொல்வது இல்லை. பக்தியே முத்தி இன்பம் ஆகிவிடும் என்பது அவர்கள் கொள்கை. "இறவாத இன்ப அன்பு" என்பர் சேக்கிழார்.

83