பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் பெருமை {}

உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும் நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல் வேள்வி முற்றிய வென்றடு கொற்றத் தீரிரண் டேந்திய மருப்பின் எழில்நடைத் தாழ்பெரும் தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும் நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் பலர்புகழ் மூவரும் தலைவராக ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முகன் ஒருவன் சுட்டிக் காண்வரம் பகலில் தோன்றும் இகலில் காட்சி நால்வே றியற்கைப் பதினெரு மூவரொ டொன் பதிற் றிரட்டி உயர்நிலை பெறீஇயர் மீன்பூத் தன்ன தோன்றலர் மீன் சேர்பு வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத் தீயெழுந் தன்ன திறவினர் தீப்பட உருமிடித் தன்ன குரலினர் விழுமிய உருகுறை மருங்கில்தம் பெறுமுறை கொண்மார் அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத் தாவில் கொள்கை மடந்தையொடு சின்னுள் ஆவினன்குடி அசைதலும் உரியன்

என்று பாடிக் காட்டினர்.

'சிவபெருமான், இந்திரன், திருமால், யமன், வருணன், குபேரன், முப்பத்து முக்கோடி தேவர்கள், பதினெண் கணங்கள் முதலானவர் தம் தம் தொழில் முறையே இனிது நடக்க வரம் வேண்டி முருகப் பெருமானைக் குழுமி நின்றனர்” என்பதே இதன் கருத்து.