பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் பெருமை 18

அன்றி வேறு யார் என்று உணர்ந்து பேசின்ை சிங்க முகன். இவன் முருகனைச் சிறப்பித்துப் பேசிய பேச்சுக் களையும் அவ்வளவு சிறந்தனவாக ஏற்க இயலாது, முருக னது நேர் பகைவனை சூரபதுமனே முருகனது பெருமை யினை உணர்ந்து போற்றிப் புகழ்ந்திருப்பின்; அது முரு கனது பெருமைக்கு ஒப்புயர்வற்ற காரணமாகத் துலங்கும் என்று நீங்கள் அவாவி இருக்கலாம். உங்கள் அவா அடங்கச் சூரபதுமனும் முருகன் பெருமையினை உணர்ந்து போற்றியதையும் ஈண்டே கூறுவோமாக.

போர்க்களத்தில் முருகப் பெருமானும் சூரபதுமனும் எதிர்த்து நிற்கின்றனர். சூரபதுமன் தன்னை மறந்து முருகப் பெருமானது இளமைக் கோலத்தில் ஈடுபட்டு, அவன் தன் அருமை பெருமைகளை நன்கு உணர்ந்து, போற்றிப் பரவலுற்றனன். அவன் முருகனை நேர்க்கி,

கோலமா மஞ்சைமீது குலவிய குமரன் தன்னைப் பாலன்என்றிருந்தேன் அந்நாள் பரிசிவை உணர்ந்தி

லேன் யான் மாலயன் தனக்கும் ஏனைவானவர்தமக்கு யார்க்கும் மூலகாரணமாய் நின்ற மூர்த்தி இம்மூர்த்தி அன்ருே சூழுதல் வேண்டும் தாள்கள் தொழுதிடல் வேண்டும்

அங்கே

தாழுதல் வேண்டும் சென்னிதுதித்திடல் வேண்டும்தாலு 'ஆழுதல் வேண்டும் தீமை அகன்று நான் இவற்காளாகி வாழுதல் வேண்டும் நெஞ்சம் தடுத்தது மானம் ஒன்றே

என்று பாராட்டியதைக் கேண்மினே கேண்மின். பகைவன லேயே இங்ங்னம் பாராட்டப்படும் பெருமை சான்றவன் முருகன் எனில், அவனது பெருமையினை எம்போல்வரால் எங்ங்னம் எடுத்து இயம்பப் பெறும்? ஆகவே, இந்த அள