பக்கம்:கனவுப்பாலம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கனவுப் பாலம் கெளதம்! ரியோவைச் சுட்ட அந்தக் கொலேகாரனிட மிருந்து அப்புறம் ஏதாவது தகவல் கிடைத்ததா? பாங்க் லாக்கரில், ரியோவின், கடிதம் கிடைத்த செய்தியை கெளதம் ரகசியமாகவே வைத்திருந்தான். ரியோ குறிப்பிட்ட அந்த ஆறு பேரையும் போலீஸில் பிடித்த பிறகே பத்திரிகைகளில் செய்தி வெளியாக வேண்டும். அதுவரை எந்தத் தகவலும் யாருக்கும் தெரியக் கூடாது என்பது போலீஸ் உத்தரவு. கெளதம் ராஜ விசுவாச முள்ள பத்திரிகை நிருபன். 'ஒரு தகவலும் தெரியவில்லே. முரடன் அவ்வளவு லேசில் சொல்லிவிடுவான?’ என்று ஒன்றும் அறியாதவன் போல் பதில் சொன்னன் கெளதம். "இண்டஸ்ட்ரீஸ் மினிஸ்டரைச் சும்மா விடக் கூடாது. எனக்கென்னவோ அவருக்கும் இதில் பங்கு இருக்கிற தென்றே தோன்றுகிறது,’’ என்ருன் கோபால், புலன் விசாரணையில் பல உண்மைகள் தெரியப் போகின்றன, பார்! இன்று. நாளை நல்ல செய்தி எதிர் பார்க்கலாம். அது சரி; உன் எதிர் காலம் பற்றி ஏதாவது முடிவு செய்தாயா, கோபால்??? - - ஊருக்கே திரும்பிப் போக வேண்டியதுதான். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்!?? என்ருன் கோபால். அமெரிக்காவுக்கா1?? - - இல்லை. நான் டிப்கோ கம்பெனிக்கும்,எண்ணெய்க்கும் தல முழுகி விட்டேன். என் ராஜினமாக் கடிதத்தை அனுப்பி மூன்று நாட்கள் ஆகின்றன. இப்போது நான் ஒரு சுதந்திர புருஷன்!’ இேல்லை;இன்றுமுதல்தான் நீ அடிமையாகப் போகிருய்!” என்று அயாகோவை ஜாடையாகப் பார்த்துச் சிரித்தான் கெளதம். • , புேதிர் போடுகிருயா, கெளதம்??? இல்லை. உனக்கு இன்று திருமணம். என் முன்னிலையில் தான் நடக்கப் போகிறது. மணப்பெண் யார் தெரியுமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/82&oldid=768680" இலிருந்து மீள்விக்கப்பட்டது