பக்கம்:கனவுப்பாலம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கனவுப் பாலம்.

  • நீ காதலித்த பெண் உன்னை விரைவில் மணந்து: கொள்வாள். இன்னும் ஒராண்டில் உனக்குப் பெண் குழந்தை பிறக்கும்.’

அயாகோ வெட்கமாய்த் தலைகுனிந்து கொண்டாள். *நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலிதான். ஜப்பானுடன் எண்ணெய் உறவு கொள்ளக் கனவுப்பாலம் கட்டினேன். அது கனவில் கட்டிய பாலமாகவே ஆகி விட்டது! ஆலுைம் இப்போது எண்ணெய்க்குப் பதிலாக ஒரு பெண்ணே மணந்து: கொண்டு ஜப்பானுடன் உறவு தேடிக்கொண்டு விட்டேன். இது அதிர்ஷ்டம்தானே?’ என்ருன், நெக்ஸ்ட் என்ருன். - *ஒட்டலுக்குப் போகிருேம். விருந்து சாப்பிடுகிருேம்,” என்ருள் அயாகோ,

  • அப்புறம்? என்ருன் கோபால். *ஹனிமூன் ! பயப்படாதே! உங்களோடு நான் வர மாட்டேன்’ என்று குறும்பாகச் சிரித்தான்.கெளதம்.

மூவரும் டைனிங் ஹாலில் விருந்து சாப்பிட்டுக் கொண் டிருந்தபோது டி.வி. யில் செய்தி படித்தார்கள். கிஜிமா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறு பேரும் கைது! - - பாங்க் லாக்கரில் கிடைத்த ரியோவின் கடிதம். இண்டஸ்ட்ரீஸ் மினிஸ்டர் ராஜினமா!' 'குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் ஒத்துழைப்புதந்த யமூரி லாண்ட் நிருபர் கெள்தமைப் பாராட்டும் வகையில் போலீஸ் இலாகா ஒரு பெரும் தொகையைப் பரிசாக அளிக்கிறது!’ r * 。 - கெளதம்! கங்ராஜுலேஷன்ஸ்! கடைசிவரை என்னிடம் எதையுமே சொல்லவில்&லயே நீ!பெரியஅதிர்ஷ்டக் காரன் நீதான்! இன்னொரு ஐஸ்கிரீம் சாபபிடுகிருயா?’ என்று கேட்டான் கோபால். அயாகோ பேசாமல் நின்றன். இன்ப அதிர்ச்சியால் தாக்கப்பட்டு, உணர்ச்சி,வசமாயிருந்தாள், ! - முற்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/84&oldid=768682" இலிருந்து மீள்விக்கப்பட்டது