இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
112 ☐ கனிச்சாறு – முதல் தொகுதி
82 இந்திக் கோட்டையைச் சுக்கு நூறாக்குக!
இந்தி என்னும் இரும்புக் கோட்டையை
இடித்துச் சுக்குநூ றாக்குக! அங்கே
செந்தமிழ்க் கோட்டையைச் செழிப்புடன் எழுப்புக!
சிறுமைச் சாதி மதங்களை அகற்றுக!
சொந்தமென் றொருநிலம் தமிழருக் காக்குக!
சோர்வையும் அடிமைத் தனத்தையும் விலக்குக!
இந்தவோர் கொள்கையில் தமிழினம் இளைத்தால்
எந்தமிழ் இருக்கும்; இனமிருக் காதே!
-1982