உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  5

உளமறிந்து வந்தவளை உவந்துவர வேற்றேன்;
உணர்வளித்து நான் வளர இலக்கியப்பால் ஊட்டி
வளமையுற உயிருவக்கும் மெய்யுணர்வைக் கீண்டு
வயங்குதமிழ்த் தேன்பிழிந்தே எனைச்சுவைக்க வைத்தாள்!
அளவகன்ற தவள் பெருமை அத்துணைக்கும் வேட்கை;
ஆயினும்என் செய்குவன்யான்? வளர்ச்சியுறாப் பிள்ளை
பிளவுபடாத் தொடர்புகொள வேண்டுகிறேன் யாண்டும்;
பிணி, உறக்கம், சாவு, ஒடுக்கம் இவற்றினுக்கென் செய்வேன்?

-1954

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/32&oldid=1417361" இலிருந்து மீள்விக்கப்பட்டது