பக்கம்:கனிச்சாறு 2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  81


51  ஒற்றுமை பூக்காது!


முற்றும் மதிகெட்ட மூட வடபுலத்தீர்!
குற்றிமியை மேன்மேலுங் குத்திச் சலிப்பதுபோல்
ஒற்றுமை என்றும், ஒருமைப்பா டென்றுமே
வெற்றுரை பேசிடுவீர்; வீணே செயல்புரிவீர்;
செற்றுச் சிதைத்திடவே சட்டங்கள் செய்திடுவீர்.
பற்றின் (P) இதனைப் பகர்கின்றேன்; பார்ப்பானின்
வெற்றுடலில் பூணூல் விளங்குவரை, அந்நொ சில்
முற்றியுள “சாதிமத” முட்காடிங் குள்ளவரை,
அற்றை “மனு நூல்” அழியுவரை - இந்நிலத்தே
ஒற்றுமையும் பூக்கா(து); ஒருமையுளம் காய்க்காது;
மற்றிந்த மக்கள் மனங்கனிய மாட்டாது;
கற்றறிந்தும் மீட்சியில்லை; காண்!"

 
-1967


52  தமிழரிடை உணர்வுண்டோ?

வான்முட்டப் பேசுகின்றார்; கைதேய எழுதுகின்றார்;
பாடுகின்றார்; வருவாய் என்றால்
தேன்சொட்டுக் கங்காந்த
சிறுநரிபோல் கொள்கையெல்லாம்
தீயிலிட்டுப் பொசுக்கி விட்டுக்
கூன் தட்டக் குனிகின்றார்; குடும்பமெனக் கூறுகின்றார்;
காரணங்கள் கோடி சொல்வார்!
ஊன்கெட்ட தமிழரிடை
உணர்வுண்டோ? குருதியுண்டோ?
சூடுண்டோ? ஊர்த்தொண் டுக்கே!

-1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/117&oldid=1424669" இலிருந்து மீள்விக்கப்பட்டது