பக்கம்:கனிச்சாறு 2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  87

சாய்க்கடை நீருக்குச் சருக்கரை இடுவதால்
போய்க்குடித் துவக்கும் புல்லரும் யாவரோ?

பண்புள்ள நாட்டைப் பாழ்செயப் பிறந்தீர்!
கண்படைத் திருந்தும் கால்மலம் மிதித்தீர்!
திரைக்குள் நடப்பது தெருவில் வருவதா? 130
புரைசெயும் மண்டையுள் புதைந்தது சாணியா?
ஆண்கள் என்ன உலா வருகின்றீர்!
மாண்பு தவிர்த்தீர்! மக்களைக் குழப்பினீர்!

திரைப்பட நாற்றம் தெருவெலாம் வீசும்!
நரைத்த கிழவரும் நல்லிளை யோரும்
குரைக்கும் நாய்களும் கூட்டத்துப் பன்றியும்
திரைப்படப் பாட்டையே பாடுவ தன்றி
வேறொரு பாட்டை விளம்பக் கேட்டிலமே!
கூறு கூறாகத் தீமையைக் கொட்டினீர்!
வாருதற் கெத்தனை அறிஞர் வந் திடினும் 140
சேர்ந்துள குப்பையைக் கூட்டுதல் ஒல்லுமோ?

‘டப்பாங்' குத்துப் பாடலைத் தவிர
ஒப்புங் கருத்திலோர் பாடலை யேனும்
திரைப்படப் பாவலன் என்னுமோர் தீயன்
உரைப்பக் கேட்டமா? உலகம் பொறுக்குமா?
பாட்டுக்கு 'ஆயிரம்' பறிப்ப தல்லால்
நாட்டுக்கு வந்த நன்மை என்ன?
உலகம் உருப்பட உயர்ந்த கருத்தில்
லவயப் பாடல் எழுதும் பாவலர்
அருந்தமி ழகத்தில் ஆயிரம் இருக்க 150
அருந்துங் குடிமயக் குற்ற உளறலைப்
பாட்டென வாங்கிப் பசுமை மனங்களில்
கேட்டை வளர்க்கும் கேடரே! கேட்க;

உங்கள் மனைவியும் மகளும் ஒழுங்கிலா
தெங்கணும் நாய்போல் இழிந்து திரிவதை
ஒப்புமோ உள்ளம்? ஊர்ப்பெண்டிர் வேறோ?
தப்புமோ தரையினை அறைந்தவன் தன்கை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/123&oldid=1424676" இலிருந்து மீள்விக்கப்பட்டது