பக்கம்:கனிச்சாறு 2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


ஆரியக் கொட்டங்கள் ஆட்டங் கண்டு, அதன்
பூரியச் செயல்கள் புதைக்கப் பட்டன!

பார்ப்பனப் பூசல்கள் இனிநட வாவெனும்
போர்ப்பண் இங்கே எழுச்சி கொண்டது!
தமிழினம் மீண்டும் பெரியார் தொண்டினால்
இமைவிழி திறந்து எழுந்து கொண்டது!

அந்த எரிச்சலால் ஆரியத் தலைவர்
நொந்து சாகிறார்; நொட்டணை சொல்கிறார்.

பெரியார் விதைத்தது நச்சாம்! காஞ்சிப் 140
பெரியவர் விதைப்பது மருந்து விதைகளாம்!

ஏமாற்றிக் கொண்டே இருந்திட லாமெனத்
தாமாற்றும் பொய்யையும் புளுகையும் மேலும்
தொடர்ந்து வருகிறார் சின்ன பெரியவாள்!
அடர்ந்து வருமோர் ஆக்கம் அறிகிலார்!

அவருக் கிதன்வழி அறைந்திடு கின்றோம்!
தவறு நடந்தது தனிவர லாறு!
செய்த தவற்றையே மேலும் செய்திட
பொய்செய் பார்ப்பனர் எண்ணுதல் புரையே!

இனநலத் தீங்கை இற்றைத் தமிழர் 150
உணர்ந்து கொண்டனர்! உறக்கம் கலைந்தனர்!

இன்னும் அவரை இன்னலில் ஆழ்த்திட
எண்ணும் நினைவைப் பார்ப்பனர் எண்ணினால்
அவர்க்கது சாக்காட்டுத் தீமையை அளித்திடும்!
எவர்க்கும் எங்கும் தீங்கினை எண்ணியே
பழக்கப் பட்ட பார்ப்பன இனத்தினர்
வழக்கத்தை மாற்றி வாழ்வகை காணுக!
நெருப்புத் தமிழர் நிலையறிந்து
இருப்பதற் கேனும் இனிநலம் கருதுக!

-1982
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/220&oldid=1437416" இலிருந்து மீள்விக்கப்பட்டது