பக்கம்:கனிச்சாறு 4.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 கனிச்சாறு – நான்காம் தொகுதி


56

வாழ்வியல் முப்பது!


புகழ்ச்சியின் மயக்கறு!
புன்மையை உதறு!
இகழ்ச்சியைத் தாங்கு;
எள்ளலை எடுத்தெறி,
நிகழ்ச்சியை வரிசைசெய்
நினைவை உறுதிசெய்!
மகிழ்ச்சியும் துயரமும்
மனத்தின் செயல்களே! 1

ஊக்கமும் முயற்சியும்
உண்மையும் நேர்மையும்
ஆக்க வினைகளும்
அடிப்படைக் கொள்கைகள்!
ஏக்கம் அகற்று!
ஏறுபோல் வினைசெய்
தாக்கும் இழிவுகள்
தாமே விலகிடும்! 2

இன்றைய நாள் நினை;
இனிவரும் நாள் நினை;
என்றும் புதியன், நீ!
யாவும் புதியன!
அன்றன்றும் புதுநாள்!
அனைத்தும் இனியன!
ஒன்று, கை போகின்
ஒன்றுன் கைவரும்! 3

உள்ளம் விழைவதை
அறிவினால் ஓர்ந்துபார்!
தள்ளத் தகுவன
உடனே தள்ளுவாய்!
தள்ளத் தகாதென்
றறிவு தேர்வதைக்
கொள்ள முயற்சிசெய்!
கொடு நினை வகற்று!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/115&oldid=1440746" இலிருந்து மீள்விக்கப்பட்டது