பக்கம்:கனிச்சாறு 4.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 87


பொருந்துணா விருந்து;
புறவுரை முதுபிணி!
அருந்தலும் அளவுசெய்!
ஆசை அடக்கியாள்!
திருந்துதல் வாழ்க்கை!
தெறுநோய் முன்தவிர்!
மருந்துணல் தீது!
மணிநீர் மருந்து! 29

பொதுமை உலகிது;
பொதுமை வாழ்விது;
பொதுமை உயிர்நலம்!
பொதுமையே இயக்கம்!
பொதுமைஉன் எண்ணம்;
பொதுமைஉன் வினைகள்!
பொதுமையாய் ஆக்கு, உனை!
புதுநலங் காண்பாய். 30

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/122&oldid=1440752" இலிருந்து மீள்விக்கப்பட்டது