பக்கம்:கனிச்சாறு 4.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  97


66

மூட்டுக்கு வலிவு செய் !
முதுகுக்கு நிமிர்வு தா !


கேட்டுக்கொள், தம்பி!
உன்முயல் வாலே
கிளர்ந்தெழ வேண்டும் நம்இனம்!
பாட்டுக்குத் தாளமாய்
உன் தொண்டி னாலே,
பயன்பெற வேண்டும் நம்மொழி!
நாட்டுக்குள் வேட்டை
நாய்களாய்த் தம்முடை
நலன்களே வளங்களே தேடுவார்!
காட்டுக்குள் புலியெனக்
களைப்பின்றி அலைகுவாய்!
கவனமாய்ப் பொதுநலம் கூட்டுவாய்!

ஏட்டுக்குள் உன்னைப்
புதைத்துக்கொள் ளாதே!
எழு, நட; உலகினை நேர் படி!
பூட்டுக்குத் திறவுபோல்
புதுமைக்கு வழிவிடு!
புன்மைக்குத் தீவைத்துக் கொளுத்துவாய்!
மூட்டுக்கு வலிவு செய்;
முதுகுக்கு நிமிர்வு தா;
முன்கையை எஃகுப் போல் முறுக்கிடு!
கேட்டுக்கு முன்னை நில்!
கிளர்ச்சிக்கு வித்திடு!
கீழ்மையும் கயமையும் பொசுக்குவாய்!

-1984
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/132&oldid=1440765" இலிருந்து மீள்விக்கப்பட்டது