பக்கம்:கனிச்சாறு 4.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

கஎ


கனிச்சாறு நான்காம் தொகுதி
(இளைய தலைமுறை, பொதுமை, இயக்கம்)
பாடல் விளக்கக் குறிப்புகள்


இளைய தலைமுறை

1. நம்முடைய அறியாமைக்குக் கடவுள்மேல் பழிபோடும் உணர்வுகளைக் கடிவது இது.

2. புகைபிடிப்பதில்தான் எத்துணைத் தீமைகள் வந்து சூழ்கின்றன?

3. வீரனைப் பெற்ற தாயின் மகிழ்ச்சி இது.

4. கோழையைப் பெற்ற தாயின் உள்ளக் குமுறல் இது.

5. ஏழைக்குப் பிறந்த பிள்ளையை ஏன் பிறந்தாய் என்று கேட்டு உள்ளம் கசிகின்றாள் ஒருத்தி.

6. அயன்மொழி, தமிழ் மணங் கமழும் வாயில் நஞ்சாகப் பாய்ச்சப் பெறுவதைக் கண்டிக்கிறது. இப்பாடல்.

7. உண்மையான கல்வி எது என்று விளக்குகிறது இப்பாட்டு.

8. ‘தென்மொழி’ யின் தொடக்கக் கால இதழில் வெளிவந்த இப்பாடலில் தமிழிளைஞர்கள் எழுச்சி எத்தகையதாய் அமைதல் வேண்டும் என அறிவுறுத்துகிறார் பாவலரேறு.

9. இப்பாடல் இதுவரை அச்சில் வராதது. ஐயா அவர்களின் பழஞ் சுவடியிலிருந்து எடுக்கப் பெற்றது. தமிழர் படை எழுந்தால் என்ன நிகழும் என விளக்கும் எழுச்சிப் பாடல் இது.

10. போலித்தனமான வாழ்க்கை என்பது எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய விளக்கம் இது.

11. செந்தமிழ்த்தாயிடம் ஒரு சூளுரைப்பு.

12. 1965-இல் எழுந்த இந்தி எதிர்ப்புப் போருக்கு இதுபோலும் பாவலரேறுவின் நூற்றுக்கணக்கான பாடல்கள் போர்முரசங்களாக உதவியிருக்கின்றன.

13. நாட்டின் புதிய வரலாற்றை எழுத மாணவர்களை அழைக்கிறது இப்பாடல்.

14. புதிய தமிழன் எவ்வாறு இருத்தல் வேண்டும் என விளக்குகிறார் பாவலரேறு. சாதிச் செருக்கை சகதியில் போடவும், ஏற நிகரமை எடுத்து முழக்கவும் தமிழிளைஞனைப் பயிற்றுவிக்கும் உயர் கருத்துப் பாடல் இது. தமிழ்ச்சிட்டு ஆசிரியவுரைப் பாடலாக வந்தது.

15. மாணவப் பருவமே மாண்புடைப் பருவம். கல்விதான் அப் பருவத்தை உயர்த்துவது - என்பதை மாணவர்மீது கவலை கொண்டு விளக்குகிறார் பாவலரேறு அவர்கள். இப் பாடலும் தமிழ்ச்சிட்டு ஆசிரியவுரைப் பாடலாக வெளிவந்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/18&oldid=1444658" இலிருந்து மீள்விக்கப்பட்டது