பக்கம்:கனிச்சாறு 4.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184  கனிச்சாறு – நான்காம் தொகுதி


124

புரட்சி செய் தம்பி, கனல்போல!


மின்னலாய் மின்னு!
இடியாக இடி!
மேலேறு தம்பி மேலேறு!
இன்னலாய் வாழும்
ஏழையர்க் கெல்லாம்
எப்போது விடிவது? வழிகூறு!

புயலாகச் சீறு!
பொழுதாகக் காய்ச்சு!
புரட்சி செய் தம்பி, கனல்போல!
வயலாக விளைந்தாலும்
வாய்க்காது, உழவர்க்கு!
வழிபறிப் பாரைத் தீய், அனல்போல!

-1986


125

இயற்கை அன்னையின் ஈகை !


அன்னை இயற்கை
அளப்பரும் ஆற்றலை
உன்னுள் தந்து, நல்
உடலையும் தந்தே,

நீ, உல வுதற்கொரு
நிலமும் தந்து,
ஈவும், இரக்கமும்,
இனியஅன் புணர்வும்,

உள்ளத்து விதைத்தே
உணரவும் விளங்கவும்
ஒள்ளிய அறிவையும்
உனக்குத் தந்தது!

அரிய பொருள்களை
ஆக்கம் கருதி
உரிய முறைகளில்
ஊக்குவிக் காமல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/219&oldid=1444533" இலிருந்து மீள்விக்கப்பட்டது