பக்கம்:கனிச்சாறு 4.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 13


10

போலியர் வாழ்வு!


உடுக்கும் உலவும் உறுங்களைப் பேக உணவு பல
மடுக்கும் முடங்கும் மயலுற வேபல மங்கையர்பால்
படுக்கும் அழிக்கும் பயனொன் றறியாப் பல்பிறவி
எடுக்கும் புழுக்களை என்பெயர் இட்டிங் கிழிப்பதுவே? 1

தத்தும் மகவாய் அறிவினில் தாழ்ந்துந் தருக்குவதும்
பித்தும் இடக்கும் பிழைமலிந் தேசொல் பிதற்றுவதும்
செத்தும் பிழைத்தும் நொடிநொடித்
                                                   தாழ்ந்தே சிறுசெயலால்
எத்தும் புரட்டரை என்பெயர் இட்டிங் கிழிப்பதுவே? 2

வாய்க்கும் குடற்கும் வழிதுறை யின்றி வலிந்தருத்தித்
தாய்க்கும் மனைக்கும் தகுபிரி வெண்ணா தணைந்துபல
நோய்க்குன் றெனத்தாம் நுடங்கிடும்
                                                    போதும் நொடிந்தவரை
ஏய்க்குங் கொடியரை என்பெயர் இட்டிங் கிழிப்பதுவே? 3

-1961
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/48&oldid=1440466" இலிருந்து மீள்விக்கப்பட்டது