பக்கம்:கனிச்சாறு 5.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


77  குயிலும் பாம்பும்!

பாடிக் கொண்டே எங்கெங்கும்
பறந்து போகும் கருங்குயிலோ
கூடு கட்டி முட்டையிட
கொஞ்சமும் அறியா தென்றைக்கும்!

காக்கைக் கூட்டைக் கண்டதிலே
குயிலும் முட்டை வைத்துவிடும்
ஊக்கத் தோடதை அடைகாக்கும்
உண்மை உணரா காக்கையுமே!

புற்றைச் செய்து குடிவாழ
பாம்போ அறியா ததனாலே
சிற்றெ றும்பு முயற்சியினால்
செய்த புற்றில் குடியேறும்!

குயிலும் பாம்பும் போலிருக்கக்
கூடா தென்றும் சிறுவர்களே!
பயிலும் கல்வி முயற்சியினால்
பலரும் போற்ற வாழ்ந்திடுவீர்!

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/102&oldid=1424906" இலிருந்து மீள்விக்கப்பட்டது