பக்கம்:கனிச்சாறு 5.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


கால் கை தளர்ந்தது! வறண்டது வாய்!
கண் இருண்டது! உயிர் திணறியது!
மூளை கலங்கும் வகையாக
மூண்டது தீப்பசி வயிற்றுள்ளே!

பசியால் வயிறு பேசியது:
'பசி' எனக்கேட்டால் அன்போடு
"புசி" என் பானே பெரியவனாம்!
"போ" என் பானே சிறியவனாம்!

-1967


90  துன்பத்திற்குத் துவளாதே!

துன்பம் வரும்போழ்தில் - நீ
துவண்டு விடவேண்டா!
இன்பம் வரும் பின்னே - என
எண்ணியிரு தம்பி!

சூழ்ச்சி பிறர் செய்வார் -
சோர்ந்து விடல் தீது!
தாழ்ச்சி வரும் முன்னே - நீ
தப்பி விடல் நன்று!

வாய்மைஉளம் கொண்டே - உன்
வாழ்வில் நலம் தேடு!
தூய்மைமனம் கொண்டோர் - ஒரு
தோல்வி பெறல் இல்லை!

செல்வ வளம் எல்லாம் - நிலை
தேய்ந்து விடல் நேரும்!
கல்வி வளம் என்றும் உனைக்
காத்து வரும் தம்பி!

-1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/116&oldid=1424919" இலிருந்து மீள்விக்கப்பட்டது