பக்கம்:கனிச்சாறு 5.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

கஎ

கனிச்சாறு ஐந்தாம் தொகுதி
(குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழிமாலை)
பாடல் விளக்கக் குறிப்புகள்
-குஞ்சுகளுக்கு-



1.இயற்கையின் வண்ணங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லும் இசைப்பாடல் இது.
2. அறிவியல் கண்டுபிடிப்பின் வியப்பை எளிமையாய்ச் சொல்லி அறிவார்வத்தைத் தூண்டும்
இசைப்பாடல்.
3. நோய் வராமைக்குத் தூய்மையும், வீட்டமைப்பும் கரணியங்கள் என எளிமையாய்க் கூறுகிறது இப்பாடல்.
4. கதிரவனின் சிறப்பைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லும் இசைப்பாடல் இது.
5. குழந்தையைப் பாடச் சொல்லி ஆடச் சொல்லி உணவையும், தமிழையும் ஊட்டுகிறது
இப்பாடல்.
6. பாட்டியின் செயல்களைக் குழந்தைக்குச் சொல்வதான இசைப்பாடல்.
7. திருக்குறள் கருத்துகளுள் ஏழினைக் குழந்தைகட்கு இசையால் ஊட்டுகிற பாடல்.
8. அம்மாவின் அன்புச் செயல்களை 'அ'கர வரிசையில் குழந்தையே சொல்வதுபோன்ற
இசைப்பாடல்.
9. மலையின் பிறப்பும் சிறப்பும் விரிந்திருக்கிறது இப்பாடலில்.
10. காற்றின் மென்மை, வன்மை, தன்மைகளை விளக்கும் இசைப்பாட்டு.
11. சேவலின் இயல்புப்போக்குகளை மாந்தப் பண்புகளோடு இணைத்துப்பாடும் இசைப்பாட்டு.
12. வானூர்தி மக்களுக்குப் பயனாவதை மட்டும் சொல்லாமல் போருக்கும் பயன்பட்டுத்
தொல்லை தருவதையும் குழந்தைகளுக்கு அழகாய்ச் சொல்லும் பாடல்.
13. வீட்டைக் கட்டுகிற செயலை விளக்கி அதன் ஓட்டத்திலேயே பாட்டும் அழகுறு நடையில்
அமைந்திருக்கிறது.
14. நடப்பதில் உள்ள முறைமைகளைக் குழந்தைக்குச் சொல்லும் அழகு இசைப் பாடல்.
15. காக்கையின் இயல்பைச் சொல்லிக் குழந்தைகளுக்கு அறிவூட்டுகிற இசைப்பாடல்.
16. பறவைகள், விலங்குகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டுவனவும், புறந்தள்ள
வேண்டுவனவும் எவை எவையென அழகுற விளக்கும் அறிவுப் பாடல்.
17. மயிலின் உடல் அழகையும், ஆடல் அழகையும், நடை அழகையும் குழந்தைகட்கு
இசைப்பாட்டில் அழகுற காட்டுகின்றார் பாவலரேறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/18&oldid=1424427" இலிருந்து மீள்விக்கப்பட்டது