பக்கம்:கனிச்சாறு 5.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  153


154  இழிந்தோரும், உயர்ந்தோரும்!

காக்கைக்கு 'வேம்பு' இனிக்கும்;
கழுதைக்குத் ‘தாள்' இனிக்கும்;
கழிவுக் குப்பை,
ஈக்களுக்கோ மிக இனிப்பாம்!
இழிந்தவர்கள் இவை போல்வார்.
எனினும் வண்ணப்
பூக்களிலே தேனெடுக்கப்
போகின்ற தேனீப்போல்
பொறிவண் டைப்போல்
ஊக்கமொடு நல்லனவே
உவந்து, உண்டு மகிழ்ந்திடுவர்
உயர்ந்தோர் தாமே!

-1968


155  நட்பும் பகையும் !


நகைப்பவர் யாவரும்
நண்பர்கள் ஆகார்!
தொகைப்பெருக் கென்பதும்
தோழமைக் கில்லை!
மிகைப்படப் பழகுதல்
மிகுதுயர் செய்யும்!
பகைப்பவர் என்பவர்
பழகி யிருந்தவர்!

-1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/187&oldid=1424459" இலிருந்து மீள்விக்கப்பட்டது