பக்கம்:கனிச்சாறு 5.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154  கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி


156

கல்விக்கு அணிகலன்!


கல்விக் கணிகலன்
கடமையும் ஒழுக்கமும்!
செல்வம் விளைப்பன
செப்பமும் முயற்சியும்!
வெல்வ தென்பது
பொய்படா வினைத்திறம்!
அல்லல் தருவன
ஆவலும் சோம்பலும்

-1968


157

அறிவும் அறியாமையும்!


அறிவிலரும் சிற்சிலகால்
ஆர்ப்பரிப்பால் ஆன்ற
அறிவுளர்போல் வாய்ச்சொல்
அவிழ்ப்பர் - வறிதே
பெருமின்னல் ஆர்த்துப்
பெயல் துறக்கும் வானுண்(டு)!
அரும்பணியொன் றன்றோ அளவு!

-1968


158

அயர்வு கொள்ளாதே!


முழுவதும் அறிந்துகொள்!
முடிவு செய்யாதே!
தொழுவது நன்று; எனின்
அடிமையா காதே!
விழுவதும் இயல்பு; உடன்
விசும்பென நின்றுகொள்!
அழுவது கோழைமை!
அயர்வுகொள் ளாதே!

-1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/188&oldid=1444963" இலிருந்து மீள்விக்கப்பட்டது