பக்கம்:கனிச்சாறு 5.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158  கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி


153

உள்ளமும் உரையும் செயலும்!


உள்ளம்,நன் றானால்,
உரை,தெளிந் திருக்கும்!
கள்ளம் இருந்தால்
கருத்தெலாம் இருளே!

சீரிய சொற்களே
செயல்களுக் கடிப்படை!
கூரிய கருத்தே
குழப்பம் தவிர்க்கும்!

தெளிவான உள்ளமே
தெளிவான கருத்தை
நெளிவுசுழி வின்றி
நேர்மையாய் உணர்த்தும்!

கோணல் உள்ளமே
குழம்பிய உரைதரும்;
நாணுறு செயல்களை
நாட்டினில் விளைக்கும்!

-1982
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/192&oldid=1444968" இலிருந்து மீள்விக்கப்பட்டது