பக்கம்:கனிச்சாறு 5.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


165

உழைப்புக்கு விளைவுண்டு!


உண்மைக் கென்றும்
மதிப்புண்டு, நல்ல
உழைப்புக் கென்றும்
விளைவுண்டு!
திண்மைக் கென்றும்
துணிவுண்டு, மனத்
தெளிவுக் கன்பின்
கனிவுண்டு!

பொறுமைக் கென்றும்
வழியுண்டு, உளப்
பொறாமைக் கென்று
நலிவுண்டு!
வெறுமைக் கென்றும்
இழிவுண்டு!, நல்ல
விளைவுக் கென்றும்
புகழுண்டு!

-1983


166

உண்மை உரம்பெறும்!
வெண்மை அழிவுறும்!


உண்மைக்குப் புறம்பாய்
உரைப்பன யாவும்,
திண்மை பெறாமல்
தீமையுள் மூழ்கும்!

வெண்மை அறிவால்
தீமைகள் விளைப்போன்
மண்மேல் பழியுடன்
மாய்ந்தழி கின்றான்!

-1983
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/194&oldid=1444971" இலிருந்து மீள்விக்கப்பட்டது