பக்கம்:கனிச்சாறு 5.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௦

கனிச்சாறு ஐந்தாம் தொகுதி


54. அண்ணன் உடற்பயிற்சி செய்து உடலைப் பேணுவதையும் அதன்வழி உள்ளத்தைப் பேணுவதையும் தம்பிக்குக் கூறுவதான குழந்தைப்பாடல்.

55. பாப்பாவை அப்பாவிற்கு அழகு காட்டச் சொல்லுகிறது இப்பாடல். 'தமிழ்ச்சிட்டில்' குழந்தைகளின் அட்டைப்பட வரிசையில் வெளிவந்த படத்திற்கு என எழுதப் பெற்றது. தென்மொழி மறை. நித்தலின்பனாரின் குழந்தை எயினி இளம்பிறையின் படத்திற்கு எழுதப்பெற்றது.

56. அம்மும்மாவின் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு, அம்முப்பா பொத்தகத்தைப் படிக்கும் குழந்தை (இறை - பொற்கொடியின் மகள்) இசைமொழியின் தோற்றப்படத்திற்கான பாடல் இது. தம்பி செம்மலையும் தங்கை கயலையும் அழைத்துத் தன்னைக் கவனிக்கச் சொல்வதாகக் கூறும் இசைப்பாட்டு.

57. அப்பாவின் துண்டை எடுத்துப்புடவை போல் கட்டிக் கொண்ட குழந்தை அங்கயற்கண்ணி (இறை - பொற்கொடியின் மகள்) யின் படத்திற்கான கண்ணாம்பூச்சி பாட்டு.

58. குழந்தைகளின் கண்கட்டு ஆட்டத்தின் அட்டைப்படத்திற்கானபாடல். (ஆண், பெண் குழந்தைகள் பாடும் கண்கட்டு விளையாட்டின் அழகுப்பாடல்.)

59. பாப்பாவுடன் நாய்க்குட்டி இருக்கும் ஓவிய அட்டைப்படத்திற்கான குழந்தைப்பாடல்.

60. தென்மொழி நாரா. மகிழ்நன் குழந்தைகளின் ஒளிப்படத்திற்குரிய அழகு இசைப்பாடல்.

61. 'கவின் மருத்துவமனை மருத்துவர் இளங்கோ அவர்களின் ‘இசையமுது'-எனும் பெண் குழந்தையின் ஒளிப்படத்திற்கான பாடல் இது.

62. பெண்குழந்தை ஊஞ்சலாடும் தமிழ்ச்சிட்டு' அட்டைப்படத்திற்கான ஊஞ்சல்பாட்டு.

63. அண்ணன் பட்டம் விடும் அழகைத் தம்பி வண்ணித்துப் பாடும் பாடல்.

64. அதிகமாய் உண்பது அனைவர்க்கும் துன்பம்; மிதமாய் உண்பதே மிகுதியும் இன்பம் - என்பதைக் குழந்தைகளுக்கு விளக்கிச் சொல்லும் எளிமைப்பாடல்.

-பறவைகளுக்கு-

65. மலர்த் தோட்ட அழகைப் பள்ளிக் குழந்தைகள் பாடுவது போன்றதான இசைப்பாடல்.

66. இரவல் கேட்போனைப் 'போ! போ!' என்று ஓட்டாமல் அன்பைக்காட்டவும் இருப்பதில் கொடுக்கவும் சிறுவர்களுக்குச் சொல்லுகிறார் பாவலரேறு.

67. எவை, எவை, எதனால் காக்கப்பெறுகின்றன? என்று இசைப்பாடலாய் விளக்குகிறார் பாவலரேறு.

68. கத்தியினால் பல நல்ல செயல்கள் செய்கிற வேளையில், தீச் செயல்களைச் செய்யலாமோ - என்று சிறுவர்களிடம் கேள்வி எழுப்பி உணர்த்துகிறது பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/21&oldid=1424433" இலிருந்து மீள்விக்கப்பட்டது