பக்கம்:கனிச்சாறு 5.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

உரு


122. மூட நம்பிக்கையாய் எதையும் நம்பிக் கெடாதே என அறிவுறுத்தும் இசைப்பாடல். நாடு மொழி இனம் நாடு என்று நயந்துரைக்கிற பாடல்.

123. பள்ளி செல்லும் தம்பி புன்செயல்களில் அழிந்தொழிந்து போகாமல் சாய்ந்த தமிழினத்தைச் சாகாமல் காத்துநிற்க உணர்த்துகிறார் பாவலரேறு.

124. வழலை நீரில் குழலைத் தோய்த்து ஊதி விளையாடும் குழந்தைகளிடம், வாழ்க்கையை அதனோடு ஒப்பிட்டு அறிவூட்டுகிறார் பாவலரேறு. தமிழ்ச்சிட்டு அட்டை ஓவியத்திற்கான பாடல் இது.

125. ஆரவாரங்களுடனும், இழிவு- சிறப்புப் பார்க்காமலும் கேடர்களாகவே உலவுகின்ற மூடர்கள் வாழ்கின்ற காலத்தில் - தம்பி நீ விழிப்பாய் இரு! என்று எச்சரிக்கை செய்கிறது - இப்பாடல்.

126. “இறந்தோர் பலபேர் முகவரி இல்லை - இறந்த பின்னும் எவர்க்கும் பயனாய் இருப்பாய் தம்பி”- என்று அறிவுறுத்துகிறது பாடல்.

127. பொய்ம்மையும், புனைவும் கொண்டதாய் இருக்கும் உலகில் மெய்யும், ஒழுங்கும் மேன்மையுறல் கடினம் - என உணர்த்துகிறார் பாவலரேறு.

128. “ஊர் உலகில் நடக்கும் இழிவுகளோடு கலந்து இழிந்துவிடாமல் - பிழையெனக் கண்டதை நீக்கி, உன் பிறப்பினை வரலாறாக்கிடுவாய்” - என உணர்த்துகிறது இப்பாடல்.

129. “தமிழைவிடுத்து ஆங்கிலம் பேசுவதாலும் தமிழில் ஆங்கிலம் கலந்து பேசுவதாலும் பழியன்றோ மிஞ்சும்?” என்று குழந்தைக்கு அறிவூட்டுகிறார் பாவலரேறு.

130. “தாய்மொழி, இனம், நாடு நினைத்துழைத்திடுவதோடு, உடை, மனை, உணவு ஆகியன மக்கட்கு ஒப்பவே கிடைத்திட ஒப்புவித்திடுவாய்த் தம்பி உன்னையே!” - என்று உணர்த்துகின்றது இப்பாடல்.

131. “ இன்னும் தயங்கிக் கொண்டும், உறங்கிக் கொண்டுமிராமல் எழுந்து உன் உலகக் கடமையைத் தொடங்கிடுவாய்”- எனத் தம்பிக்கு அறிவுறுத்துகிறது இப்பாடல்.

132. தாத்தாவுக்குத் ’தமிழ்ச்சிட்டு' இதழைக் காட்டி இதழின் சிறப்பைச் சிறுவன் விளக்குவதான - அட்டைப்படத்திற்கேற்ற பாடல் இது.

133. தமிழ்ச்சிட்டுக் குழந்தைகளுக்கு, நம் தமிழ்த்தேசம் குறித்தும், நம் மொழி, இன, நாட்டுரிமை குறித்தும் நாம் மேற்கொள்ள வேண்டிய பொதுமை நலம் குறித்தும் கூறுகின்றார் பாவலரேறு.

134. கடைத் தெருவில் பொருள்கள் வாங்குவதில் எந்த அளவு எச்சரிக்கை வேண்டும் என்று பயிற்றுவிக்கிறது இப்பாடல்.

135. “பல்வேறு அறிவுக் கூறுகளையும், வாழ்க்கைப் பாதைகளையும், உள்ளத்துணர்வையும் அறிந்து விளைவுகள் செய்வாய் புகழ்சூடி”- என்று சிறுவர்க்கு உணர்த்துகிறார் பாவலரேறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/26&oldid=1424492" இலிருந்து மீள்விக்கப்பட்டது