பக்கம்:கனிச்சாறு 5.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


46  ஒலிகள்!

'க, கா' என்றே காகம் கரையும்!
'கி, கீ' என்றே கிளிகள் சொல்லும்!
'கு, கூ' என்றே குயில்கள் கூவும்!
'கெ, கே' என்றே கோழிகள் கேவும்!
'கொ, கோ' என்றே சேவல் கூவும்!
'கை, கௌக்' என்னும் வானங் கோழி'

-1972


47  அணிபொருள்!

மண்ணில் விளைவது தங்கம்!
மங்கை வளையல் தங்கம்!

கடலில் விளைவது முத்து!
கண்ணகி மாலை முத்து!

நிலத்தில் கிடைப்பது வெள்ளி!
நிலாவின் காப்பும் வெள்ளி!

கடலில் இருப்பது பவளம்!
கயல்விழி கழுத்தில் பவளம்!

கரியில் முதிர்வது வயிரம்!
கனிமொழி கம்மல் வயிரம்!

-1972
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/76&oldid=1424885" இலிருந்து மீள்விக்கப்பட்டது