பக்கம்:கனிச்சாறு 5.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  49


54  உடல் நலமே உள்ள நலம்!

அண்ணன் தாண்டு கின்றான்!
அழகாய்த் தாண்டு கின்றான்!
திண்ணென் றாம் உடலும்!
திரளும் தோளும் காலும்!

ஓடித் தாண்டு கின்றான்;
உயரத் தாண்டுகின்றான்;
நாடி நரம்பும் தசையும்
நன்றாய் வலிவாய் வளரும்!

உடலம் நன்றாய் இருந்தால்
உளமும் நன்றாய்த் திகழும்!
கெடல்செய் நோய்கள் அணுகா;
கீழ்மை நினைவுகள் தோன்றா!

பயிற்சிகள் உடலைக் காக்கும்;
பண்புகள் உளத்தை ஊக்கும்!
அயர்ச்சிகள் வாழ்வைக் கெடுக்கா!
அனைத்தும் நலமே சேர்க்கும்!

-1978


55  அழகு காட்டு பாப்பா!

அழகு காட்டு பாப்பா - அப்பா
அழகைக் காட்டு பாப்பா!
பழகு மழலைச் சொல்லில் ; அவரைப்
பழித்துக் காட்டு பாப்பா!

உதட்டைப் பிதுக்கிக் காட்டி - இரண்டு
விழியை உருட்டி நோக்கி,
அதட்டி உரக்கப் பேசி - அவர்க்கு
அச்சங் காட்டு பாப்பா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/83&oldid=1424824" இலிருந்து மீள்விக்கப்பட்டது