பக்கம்:கனிச்சாறு 5.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  53


பெண்: பின்னால் இருப்பவன் கன்னல்.
பேகன் பாரடி முன்னால்!
உன்னால் தொடவும் முடியாது;
உனக்கே இருளும் விடியாது!

எல்லாரும் : பொய்யாய்த் தூக்கம் போடாதே!
பொழுது விடிந்திடும் வாடாதே!
ஐயோ! கோதை அகப்பட்டாள்!
அவிழ்த்துக் கட்டுங்கள் கண்கட்டை!

-1980


59  நாய்க்குட்டி!

நாய்க்குட்டி நாய்க்குட்டி
நன்றியுள்ள நாய்க்குட்டி!
தாய்க்கு நல்ல நாய்க்குட்டி!
தவறு செய்யா நாய்க்குட்டி!

எங்களோடு விளையாடும்;
இனிமையாகப் பழகிடும்!
அங்கும் மிங்கும் ஓடிடும்;
அழகு மிகுந்த நாய்க்குட்டி!

மொசுமொசுவென் றுடலிலே
முடிகள் தோய்ந்த நாய்க்குட்டி
கிசுகிசுக்கும் காதிலே!
கீழும் மேலும் பாய்ந்திடும்!

பாப்பா வோடு பழகிடும்!
பந்து போட்டால் பிடித்திடும்!
காப்பாய் எங்கட் கிருந்திடும்!
காதுநீண்ட நாய்க்குட்டி!

-1980
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/87&oldid=1424828" இலிருந்து மீள்விக்கப்பட்டது