பக்கம்:கனிச்சாறு 7.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96  கனிச்சாறு - ஏழாம் தொகுதி

கையெடுத்துத் தருகின்ற பொற்காசிங்
கொவ்வொன்றும் சேர்த்தெ டுத்த
பையெடுத்துத் தருமுணர்வால் பாவாணர்
வீறெடுத்துப் போரெ டுத்தால்,
பொய்யெடுத்து வீசுகின்ற புலையெடுத்த
நெஞ்சுடையார் நீட்டி வைத்த
கையெடுத்து வாலெடுத்துப் போகாரோ
காலெடுத்துத் தலைமேல் வைத்தே! 5

வகைதிரட்டி, ஆள்திரட்டி, அரசாளும்
வல்லமையால் நம்மைச் சாய்க்கும்
பகைதிரட்டிக் கொண்டுள்ளார் வடநாட்டார்,
இந்தியெனும் கருவி கொண்டே!
புகைதிரட்டி உருச்சமைக்கும் பொய்யாட்டம்
காட்டுகின்றார்! அன்னோர் நாணத்
தொகைதிரட்டித் தாருங்கள் தமிழர்களே,
பாவாணர் தொண்டுக் கின்றே! 6

நாடகத்துக் கீகின்றிர்; நடுத்தெருவில்
உடல்காட்டிக் கொட்டி யாடும்
ஆடகத்துச் சிறுமகளிர்க் குதவுகின்றீர்!
அருந்தமிழ்வாழ் பசும் பயிர்க்குள்
ஊடகத்து வருகின்ற இந்தியெனும்
காட்டெ டெருமை ஓட்டு தற்கே
பாடகத்த பான்மையினான் பாவாணர்க்
குதவுக பைம் பொன்னெ டுத்தே! 7

அடியேந்தி நின்றவர்கள் முடியேந்தி
அமர்ந்திருப்பார்; அவர்கள் பாங்கில்
குடியேந்திச் செந்தமிழ்த்தாய் நொடிகின்றாள்;
துவள்கின்றாள்; அவனை மீட்க,
மடியேந்தி, தமிழிளைஞீர், தமிழ்மகளீர்
தெருத்தெருவாய் வீடு வீடாய்ப்
படியேந்திச் சென்றுபொருள் திரட்டுவீர்
பாவாணர் மகிழு மாறே! 8

-1963
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/141&oldid=1446196" இலிருந்து மீள்விக்கப்பட்டது