பக்கம்:கனிச்சாறு 7.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


73

பாரதிதாசன் பத்து!


பூக்கும் பொழிலுட்
புகுந்திதழ் நீக்கிப் புதுநறவம்
தேக்கும் பொறியுடல்
தும்பீ! எமக்குத் தெரிந்துரைப்பாய்!
தூக்கும் தமிழப்பொழில்
பாரதிதாசன் தருசுவை தீம்
பாக்கும் உயர்ந்த
பனிமலர்த் தேறல் பயின்றதுவே! 1

பயில்வண் டயின்ற
பசுந்தேன் இலைபடு பாசடை சூழ்ந்
தயில் மண் டொளிர்தா
மரையே! உயர்வே தறிந்துரைப்பாய்;
மயல்கொண் டிலங்குயர்
பாரதி தாசன் மணித்தமிழோ?
வெயில்கண் டுவக்கும்
வெறிமலர்த் தேனோ? விளங்கிடவே! 2

வெறித்த குரலெடுத்
தின்னிசை வல்லவர் வெள்கிடயான்
குறித்த தமிழ்ப்பா
கொழிக்கும் குயிலே! குரைகடலும்
தெறித்த அலைக்கை
ஒலித்துவந் தேற்கும் தமிழ்த்திறமை
பொறித்த புலவனெம்
பாரதி தாசன்சீர் பாடுவையே! 3

பாடுங் குயிலின்
பழகின் னிசைக்கொரு பண்தவறா
தாடுங் கடிமயி
லே, அயர் வுற்றோர் அகங்குளிரத்
தேடுங் கவின்பா
முழக்கிடும் பாரதி தாசனவன்
நீடும் இசை மழைக்
காடுவை யோ, நெடுங் காலெடுத்தே? 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/143&oldid=1446198" இலிருந்து மீள்விக்கப்பட்டது